கி. ஆ. பெ. விசுவநாதம் விருது
கி. ஆ. பெ. விசுவநாதம் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருதாகும். தமிழ்நாடு அரசின் அரசாணை எண் (1டி) 14, தமிழ் வளச்சி பண்பாடு மற்றும் அறநிலையத் துறை நாள் 24.1.2000 மூலம் 2000 ஆண்டிலிருந்து இவ்விருது வழங்கப்படுகிறது. 2000 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் இந்த விருதுக்கு ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.[1][2]
விருது பெற்றவர்கள் பட்டியல்
வரிசை எண் | விருது பெற்றவர் பெயர் | விருது வழங்கப்பட்ட ஆண்டு |
---|---|---|
1 | கோ. முத்துப்பிள்ளை | 2000 |
2 | முனைவர் கா. காளிமுத்து | 2001 |
3 | முனைவர் மு. தமிழ்க்குடிமகன் | 2002 |
4 | முனைவர் ச. வே. சுப்பிரமணியன் | 2003 |
5 | முனைவர் பு. பா. இராஜேஸ்வரி | 2004 |
6 | ----- | 2005 |
7 | ----- | 2006 |
8 | கவிஞர் கா. வேழவேந்தன் | 2007 |
9 | பேராசிரியர் த. பழமலய் | 2008 |
10 | தாயம்மாள் அறவாணன் | 2009 |
11 | முனைவர் இரா. மதிவாணன் | 2010 |
12 | முனைவர் இரா. மோகன் | 2011 |
13 | நா. இராசகோபாலன் (மலையமான்) | 2012 |
14 | பேராசிரியர் முனைவர் வ.ஜெயதேவன்[3] | 2013 |
15 | பேராசிரியர் ஏ. எம். ஜேம்ஸ் | 2014 |
16 | திரு.இரா.கோ. இராசாராம் | 2015 |
17 | முனைவர் திருமதி மீனாட்சி முருகரத்தனம் | 2016 |
18 | பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம் | 2017 |
19 | திரு.சூலூர் கலைப்பித்தன் | 2018 |
20 | மருத்துவர் மணிமேகலை கண்ணன் | 2019 |
21 | முனைவர் வீ.சேதுராமலிங்கம் | 2020 |
22 | முனைவர் ம. இராசேந்திரன் | 2021 |
குறிப்பு
- 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் விருது வழங்கப்படவில்லை.
மேற்கோள்கள்
- ↑ "இதே நாளில் அன்று". 2020-11-10. https://www.dinamalar.com/news_detail.asp?id=2649784.
- ↑ தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2044/மாசி 22, ந. க. எண். ஆமொ2/1139/2013, நாள்: 06-03-2013 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் பட்டியல்.
- ↑ "பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட 9 பேருக்கு அரசு விருதுகள்: தமிழக முதல்வர் அறிவிப்பு" (in ta). https://www.hindutamil.in/news/tamilnadu/208925-9.html.