கிழக்கு ஆபிரிக்கக் கூட்டமைப்பு
கிழக்கு ஆபிரிக்கக் கூட்டமைப்பு (East African Federation, சுவாகிலி: Shirikisho la Afrika Mashariki) என்பது அரசியல் ரீதியாக முன்மொழியப்பட்டுள்ள ஒரு ஒன்றிணைவு ஆகும். ஆபிரிக்க பெருங்கண்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள, ஆபிரிக்க பெரும் எரிபடுகையை சூழவுள்ள எட்டு நாடுகளின் ஒன்றிமைவாகும். புரூண்டி, கொங்கோ சனநாயக குடியரசு, உருவாண்டா, கென்யா, தென் சூடான், தன்சானியா, சோமாலியா, உகாண்டா என்ற எட்டு நாடுகளை ஒற்றை சமஷ்டி நாடாக ஒன்றிணைக்க முன்மொழியப்பட்ட திட்டமாகும்.[5] 1960 களில் இருந்து இந்த ஒன்றிணைவு திட்டம் இருந்தபோதிலும் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை.[6][7] 2018 ஆம் ஆண்டு ஆங்கில புரட்டாசி மாதத்தில் இந்த ஒன்றியதிற்கான அரசியலமைப்பு சாசனம் வரையும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.[8] 2021 ஆம் ஆண்டில் இந்த சாசன வரைதல் நிறைவு பெற்று, 2023 இல் அமுலாகும்[9][10] என எண்ணியபோதிலும் கொவிட்-19 உலக பெரும் தொற்றுக் காரணமாக இந்தப் பணி மந்த கதியில் கிடப்பில் விடப்பட்டது. 2023 ஆம் ஆண்டு ஆங்கில வைகாசி மாதம் 9 ஆம் திகதி, மீள இந்த பணியை தொடர்வது தொடர்பாக கென்யாவில் உள்ளூர் அறிஞர்களுடன் 20 நாட்கள் கலந்துரையாடல் இடம்பெற்றது.[11]
கிழக்கு ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு East African Federation Shirikisho la Afrika Mashariki | |
---|---|
குறிக்கோள்: "ஒரே மக்கள், ஒரே இலக்கு" | |
முன்மொழியப்பட்ட தலைநகர் | அருசா |
பெரிய நகர் | கின்சாசா |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம்,[1] பிரான்சியம், சுவாகிலி[2] |
இணைப்பு மொழி | சுவாகிலி |
மக்கள் | கிழக்கு ஆப்பிரிக்கர் |
வகை | முன்மொழியப்பட்ட கூட்டமைப்பு |
நாடுகள் | |
சட்டமன்றம் | கிழக்காப்பிரிக்க சட்ட மன்றம் |
நிறுவுதல் | |
• கிழக்கு ஆப்பிரிக்க சமூகம் | 7 சூலை 2000 |
பரப்பு | |
• மொத்தம் | 5,449,717 km2 (2,104,147 sq mi)சோமாலிலாந்து உட்பட (7-ஆவது) |
• நீர் (%) | 4.14 |
மக்கள் தொகை | |
• 2024 மதிப்பிடு | 343,328,958[3] (3-ஆவது) |
• அடர்த்தி | 63/km2 (163.2/sq mi) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2024 மதிப்பீடு |
• மொத்தம் | US$1,027.067 பில்.[4] (34th) |
• தலைவிகிதம் | US$2,991 |
மொ.உ.உ. (பெயரளவு) | 2024 மதிப்பீடு |
• மொத்தம் | US$349.774 பில்.[4] (42-ஆவது) |
• தலைவிகிதம் | US$1,019 |
மமேசு (2022) | 0.515 தாழ் |
நேர வலயம் | ஒ.அ.நே+2 / +3 (ம.ஆ.நே / கி.ஆ.நே) |
வாகனம் செலுத்தல் | இரண்டும்[note 1] |
இதுவரை இந்த கூட்டமைப்பு தோற்றுவிக்கப்படவில்லை என்றபோதும் இதற்கான முன்னேற்றப்படிகள் நடந்தவண்ணமே உள்ளது.[12] இந்த நாடுகளில் இதற்கான வரைபை தயாரிக்கும் பணிகள் அந்தத்த நாட்டில் காணப்படும் நிறுவனங்கள் ஊடாக நடந்த வண்ணமே உள்ளது.[13]
பண்புகள்
இந்த எட்டு நாடுகள் இணைக்கப்பட்டு உருவாகும் புதிய நாடானது,5,449,717 கிமீ2 (2,104,147 சதுர மைல்), பரப்பளவு உடையது. இது இந்தியாவை புறந்தள்ளி உலகில் புதிய ஏழாவது பெரிய நாடாக உருவாகும். இந்த ஒன்றியமானது மேற்கே அத்திலாந்திக் சமுத்திரத்தையும் மேற்கே இந்து சமுத்திரத்தையும் எல்லைகளாக கொண்டு அமையும். உருவாகும் இந்தப் புதிய ஒன்றியத்தின் சனத்தொகையானது, இன்றைய உருசியா, ஜப்பான், பிரேசில், மெக்ஸிகோ மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைக்காட்டிலும் அதிகமாகும். சொற்ப வித்தியாசத்தில் ஐக்கிய அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகில் மூன்றாவது சனத்தொகை கூடிய நாடாக அமையும்.
இந்தப் புதிய ஒன்றிய தேசத்தின் இணைப்பு மற்றும் தேசிய மொழியாக சுவாகிலி மொழி காணப்படும்.[14] அதேவளை இதன் தலைநகரான அருசா அமையப்பெறும், இது இன்றைய தன்சானியா நாட்டில் கென்யா எல்லையுடன் அமையப்பட்டுள்ள நகராகும். அருசாவில் தான் கிழக்கு ஆபிரிக்க சங்கத்தின் தலைமை காரியாலயம் அமைந்துள்ளது.[15] இந்த ஒன்றியத்தின் 22% ஆன மக்கள் நகராட்சி பிரதேசத்திலேயே வாழ்கின்றனர்.[16]
2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கைப்படி[17] 2023 இல் ஒன்றிணைந்த நாணயத்திற்கு அனைத்து இந்த ஒன்றிய நாடுகளும் மாறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது, எனினும் கொவிட்-19 உலக பெரும் தொற்று மற்றும் புதிதாக கொங்கோ சனநாயகக் குடியரசு, சோமாலியா என்பன இணைந்தமையால், இந்த திட்டம் 2031[18] வரை பிற்போடப்பட்டுள்ளது. இதன் போது கிழக்கு ஆபிரிக்க மத்திய வங்கி உருவாக்கபடும். இந்த நிறுவனக் கட்டடம் எங்கு அமையப்பெறும் என்று இதுவரை எந்த முடிவில்லை.[19] இந்த ஒன்றியத்தின் மொத்த உள்ளநாட்டு உற்பத்தி (GDP) வீதம் சுமார் 1,027.067 அமெரிக்க டொலர் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய ரீதியில் 34வது ஆகும். அதேவேளை ஆபிரிக்க பெருங்கண்டத்தில் 3 வதும் ஆகும்.
குறிப்புகள்
- ↑ புருண்டி, காங்கோ சனநாயகக் குடியரசு, ருவாண்டா, சோமாலியா, தெற்கு சூடான் ஆகியவை வலம். கென்யா, தான்சானியா, உகாண்டா ஆகியவை இடம்.
மேற்கோள்கள்
- ↑ "TREATY FOR THE ESTABLISHMENT OF THE EAST AFRICAN COMMUNITY" (in en) இம் மூலத்தில் இருந்து 15 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220515092549/https://www.eacj.org//wp-content/uploads/2012/08/EACJ-Treaty.pdf..
- ↑ "East African Community to add Kiswahili, French as official languages". Xinhua News Agency. Xinhuanet. 28 April 2022. https://english.news.cn/20220428/78bbd1fe390740f4a99e6743d2f44198/c.html.
- ↑ "The World Factbook". cia.gov. https://www.cia.gov/the-world-factbook/.
- ↑ 4.0 4.1 "World Economic Outlook database: April 2024". https://www.imf.org/en/Publications/WEO/weo-database/2024/April/weo-report?c=618,636,664,714,733,738,746,&s=NGDPD,PPPGDP,&sy=2023&ey=2029&ssm=0&scsm=1&scc=0&ssd=1&ssc=0&sic=0&sort=country&ds=.&br=1.
- ↑ "One president for EA by 2010". Sundayvision.co.ug. 28 November 2004 இம் மூலத்தில் இருந்து 31 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121031054042/http://www.sundayvision.co.ug/detail.php?mainNewsCategoryId=7&newsCategoryId=123&newsId=402452.
- ↑ Vaughan, Chris (June 2019). "THE POLITICS OF REGIONALISM AND FEDERATION IN EAST AFRICA, 1958–1964". The Historical Journal 62 (2): 519–540. doi:10.1017/s0018246x18000407. https://researchonline.ljmu.ac.uk/id/eprint/9531/3/Freedom%20and%20Unity%20The%20politics%20of%20East%20African%20regionalism%20and%20federation%2C%201958-1964.pdf. பார்த்த நாள்: 2 January 2023.
- ↑ Ikuya, James Magode (December 2017). "Why the Current Clamor for East African Federation Cannot Produce Unity". Development 60 (3–4): 197–200. doi:10.1057/s41301-018-0163-8. ProQuest 2086486348.
- ↑ Havyarimana, Moses (29 September 2018). "Ready for a United States of East Africa? The wheels are already turning". The EastAfrican இம் மூலத்தில் இருந்து 29 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210129021127/https://www.theeastafrican.co.ke/tea/news/east-africa/ready-for-a-united-states-of-east-africa-the-wheels-are-already-turning-1403564.
- ↑ Havyarimana, Moses (18 January 2020). "Regional experts draft confederation constitution". The EastAfrican இம் மூலத்தில் இருந்து 6 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200306025719/https://www.theeastafrican.co.ke/news/ea/East-africa-experts-draft-confederation-constitution/4552908-5422610-11fx1ge/index.html.
- ↑ "East African Federation Looks Set for Further Delay" (in en-US). 2021-03-20 இம் மூலத்தில் இருந்து 15 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220815052959/https://globalriskinsights.com/2021/03/east-african-federation-looks-set-for-further-delay/.
- ↑ (30 May 2023). "National consultations for Drafting the Constitution for the EAC Political Confederation concludes in Kenya". செய்திக் குறிப்பு.
- ↑ "Overview of EAC" இம் மூலத்தில் இருந்து 1 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221101010501/https://www.eac.int/overview-of-eac.
- ↑ "EAC Leadership" இம் மூலத்தில் இருந்து 1 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221101025553/https://www.eac.int/about-eac/leadership.
- ↑ Olukya, Godfrey (25 October 2013). "Swahili to become East Africa's official language". The Africa Report இம் மூலத்தில் இருந்து 28 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200928004425/https://www.theafricareport.com/5160/swahili-to-become-east-africas-official-language/.
- ↑ "One president for EA by 2010". Sundayvision.co.ug. 28 November 2004 இம் மூலத்தில் இருந்து 31 October 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121031054042/http://www.sundayvision.co.ug/detail.php?mainNewsCategoryId=7&newsCategoryId=123&newsId=402452.
- ↑ "Overview of EAC" இம் மூலத்தில் இருந்து 1 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221101010501/https://www.eac.int/overview-of-eac.
- ↑ "East African trade bloc approves monetary union deal". Reuters. 30 November 2013 இம் மூலத்தில் இருந்து 2 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230202065012/https://www.reuters.com/article/us-africa-monetaryunion/east-african-trade-bloc-approves-monetary-union-deal-idUSBRE9AT08O20131130.
- ↑ Owino, Vincent (22 November 2023). ""EAC to revise economic targets to attain monetary union dream"". The East African. https://www.theeastafrican.co.ke/tea/business/eac-to-revise-debt-targets-to-achieve-single-currency-dream-4441988.
- ↑ Anami, Luke (11 December 2023). "Kenya sells a political solution to bloc's row on monetary institute". The East African. https://www.theeastafrican.co.ke/tea/news/east-africa/kenya-sells-a-political-solution-to-bloc-s-row-on-monetary-institute-4458680.