கிலெம்சுங்லா
கிலெம்சுங்லா, இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் கோஹிமாவைச் சேர்ந்த கல்வியாளரும், பேராசிரியையுமாவார். நாகாலாந்திலிருந்து மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ள இவருக்கு [1] இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருதும் 2014 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது.
பிறப்பு | 1 மார்ச்சு 1951 நாகலாந்து, இந்தியா |
---|---|
தேசியம் | இந்தியர் |
Alma mater | முதுநிலை (ஆசிரியக் கல்வி), முனைவர் (ஆசிரியர் கல்வி) வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம் 2002 |
அறியப்பட்டது | நாகலாந்திலிருந்து மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் |
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்பதாக, 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை நாகாலாந்து அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (NPSC) உறுப்பினராக பணியாற்றியுள்ளார், செப்டம்பர் 2012 முதல் அவர் ஓய்வு பெறும் வரை நாகாலாந்து அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயல் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். நாட்டின் பிரபல கல்வியாளரான கிலெம்சுங்லா, கோஹிமா கலைக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்து, நாகாலாந்து ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் (NCTE) மாணவர்களுக்கு பாடம் கற்பித்துள்ளார். அவர் மாவட்ட கல்விப் பயிற்சி நிறுவனம், அரசு பாலிடெக்னிக் மற்றும் பின்னர் NCTE, கோஹிமா கலைக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.. [2]
மேற்கோள்கள்
- ↑ "Business News Today: Read Latest Business news, India Business News Live, Share Market & Economy News". http://articles.economictimes.indiatimes.com/2014-01-26/news/46636458_1_upsc-padma-shri-civil-services-examination.
- ↑ "News Portal for Schemes and Counselling:- Latest News, Result, Govt. Jobs, Admit Card, News, Yojana - NPSC" இம் மூலத்தில் இருந்து 2020-01-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200124122440/http://www.npsc.co.in/documents/3147.html.