கிருஷ்ண சைதன்யா
கிருஷ்ண சைதன்யா பிறப்பில் கிருஷ்ணபிள்ளை கிருஷ்ணன்குட்டி நாயர் அல்லது கே. கே. நாயர் (நவம்பர் 24, 1918 - சூன் 5, 1994) என்பவர் மலையாள இலக்கியவாதி, மதிப்புரைஞர், இசையறிஞர், நிழற்படக்கலைஞர் ஆவார். கலை, இலக்கியம், மெய்யியல், கல்வி எனப் பலதுறைகளில் ஏறத்தாழ நாற்பது நூல்களை எழுதியுள்ளார்.
கிருஷ்ண சைதன்யா | |
---|---|
பிறப்பு | திருவனந்தபுரம், கேரளம் |
தேசியம் | இந்தியா |
பணி | கலைஞர், இலக்கியவாதி |
சமயம் | இந்து |
வாழ்க்கைக்குறிப்பு
இவர் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். மலையாள இலக்கியத்தைப் பற்றி எ ஹிஸ்டரி ஆப் மலையாளம் லிற்றேச்சர் என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். ரூபலேகா என்ற மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[1]
ஆக்கங்கள்
- யவனர் இலக்கிய வரலாறு
- ரோமன் இலக்கிய வரலாறு
- சமசுகிருத இலக்கிய வரலாறு
- அரபி இலக்கிய வரலாறு உட்பட 8 இலக்கிய வரலாறுகள்
- சமசுகிருதத்தில் இலக்கிய தத்துவ சிந்தனை
- சாத்திரத்தினது விசுவாவலோகனம்
விருதுங்கள்
- பத்மசிறீ
- கேரள இலக்கிய அக்காடமி விருது
- ஜவஹர்லால் நேரு பெலோஷிப்.
சான்றுகள்
- ↑ சம்சுகாரகேரளம் 8 (3): 94. ஜூலை - செப்டம்பர் 1994.