கிருஷ்ணன் ரஜினி
கிருஷ்ணன் ரஜினி (Rajini Krishnan, பிறப்பு: 13 சூலை, 1980)[1] தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு துள்ளுந்துப் பந்தய வீரர் ஆவார். அண்மையில் இருங்காட்டுக்கோட்டையில் நடந்த 600 க.செ.மீ பிரிவு ஆசிய-அளவிலான பெட்ரோனாசு துள்ளுந்து பந்தயப் போட்டியில் மூன்றாவதாக இடம் பிடித்துள்ளார். மேலும் இந்திய-அளவிலான துள்ளுந்து பந்தயப்போட்டிகளில் பல முறை வெற்றி பெற்றவர். 29 வயதாகும் ரஜினி, தானுந்து-வாகனங்களுக்கு அடித்துணி பொருத்தும் தொழிலாளர் ஆவார். பங்களூருவைச் சார்ந்த தினேஷ் ரெட்டி என்ற துள்ளுந்து ஆர்வலரின் உதவியால் 'ரெட் ரூசுட்டர் ரேசிங்' (RRR) என்ற குழுவிற்காக போட்டிகளில் பங்கேற்கும் ரஜினி, தன் 22-ஆவது வயதில் தான் துள்ளுந்து பந்தயப் போட்டிகளில் முதன்முறையாக பங்கேற்கத் தொடங்கினார்.[2]
பெற்றுள்ள வெற்றிகள்
- 2006-இல் ’இ’ பிரிவு 150 க.செ.மீ 2-அடிப்பு துள்ளுந்துகளுக்கான தேசியளவு போட்டியில் முதலிடம்.
- 2006-இல் ‘ஆ’ பிரிவு 150 க.செ.மீ 4-அடிப்பு துள்ளுந்துகளுக்கான தேசியளவு போட்டியில் முதலிடம்
- 2006-ஆம் ஆண்டு செப்பாங்கில் நடந்த காவாசாகி கோப்பையில் முதலிடம்.
- 2008-இல் 600 க.செ.மீ சிறப்பு-துள்ளுந்துகளுக்கான மலேசிய-சிறப்பு போட்டிகளில் இரண்டாமிடம்.
- 2009 செப்டம்பரில் 600 க.செ.மீ சிறப்பு-துள்ளுந்துகளுக்கான பெட்ரோனாசு ஆசியளவு போட்டியில் மூன்றாமிடம்.[2].
சுட்டுகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-05-27. பார்க்கப்பட்ட நாள் 2009-10-02.
- ↑ 2.0 2.1 http://beta.thehindu.com/life-and-style/youth/article19215.ece[தொடர்பிழந்த இணைப்பு]