கா. மீனாட்சிசுந்தரம்

கா. மீனாட்சிசுந்தரம் (11 சூலை 1925 - 18 நவம்பர் 2015) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளக்கிணறு எனும் ஊரில் பிறந்த இவர் தமிழாசிரியராகவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதன்மை அலுவல் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் 18 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் பல்வேறு பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய “சிலம்பில் பாத்திரங்களின் பங்கும் பண்பும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1]

சாகித்ய அகாதமியின் பாஷா சம்மான் விருது

சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருது 2013 ஆம் ஆண்டுக்குரிய விருது இவருக்குக் கிடைத்தது.[1] பழங்கால, இடைக்கால இலக்கியங்கள் குறித்து இவர் வழங்கிய பங்களிப்புகள், திருக்குறள் பற்றிய இவருடைய கட்டுரைகள், கம்பர் பற்றிய இலக்கியப் படைப்புகள் ஆகியவற்றுக்காக இவ்விருது வழங்கப்பட்டதாக 2015 சூன் 25 இல் அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கா._மீனாட்சிசுந்தரம்&oldid=3790" இருந்து மீள்விக்கப்பட்டது