கா. சுஜந்தன்

கா. சுஜந்தன் ( சுஜோ, சுருதி ) - ஈழத்து எழுத்தாளர், இதழாசிரியர். போர் வலயத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்.

கிளிநொச்சி சுகாதார வைத்திய பிரிவினால் வெளியிடப்பட்ட "விழி" மருத்துவ மாத இதழின் நிறுவனரும் ஆசிரியருமாவார் (2000-2008). விழி இதழ் தொண்ணூற்று ஐந்து இதழ்களைப் பிரசுரித்திருந்தது. சுதேச ஒளி காலாண்டு சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார் (2007-2008). கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கிய சுகாதார கல்லூரியின் "அக ஒளி" வருட சிறப்பு இதழ்களின் (இரு) ஆசிரிய ஆலோசகராகவும், புலிகளின் குரல், ஈழநாதம், தமீழீழ தேசியத் தொலைக்காட்சி ஆகியவற்றின் சுயாதீன செய்தி வழங்குனராகவும் இருந்தார்.

இவரது முதலாவது சிறுகதை " கல்லறைக்குள் தீபம் ஒன்று " உதயன் பத்திரிகையின் சஞ்சீவி வாராந்த வெளியீட்டில் 1987 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.  சிறுகதை, கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் பரிசுகளை பெற்றுள்ளார். இவர் இதழியல் துறையில் பட்டயக்கற்கையை பூர்த்தி செய்திருந்தார்.

1990  களில் கிரிக்கெற் நடுவராகவும் ( யாழ் கிறிக்கெற் நடுவர் சங்கம்), உதைபந்தாட்ட மதியஸ்தராகவும் (யாழ் உதைபந்தாட்ட மதியஸ்தர் சங்கம்), கரப்பந்தாட்ட மதியஸ்தராகவும் ( யாழ் கரப்பந்தாட்ட சங்கம் ), 2000 களில் தேசிய வலைப்பந்தாட்ட  மதியஸ்தராகவும் இருந்தார்.

வெளிவந்த நூல்கள்

  • அந்தநாளை அடைவதற்காய் (கவிதை தொகுதி) -1999
  • உறவுகள் (குறுநாவல்)-2000
  • அந்த நாள் எந்தநாளோ (பாடல்கள், சிறுகதைகள்)-2001
  • கண்ணீர்த்துளிகள் (கவிதைத்தொகுதி)-2007
  • சுகவாழ்வு (தாளலயம்)-2009
  • சாட்சி -(நீள்கவிதை )- 2010
  • பாரம்பரிய விளையாட்டுக்கள் - இணை ஆசிரியர் - 2010
  • ஒரு ஈழ அகதியின் மனவெளியிலிருந்து--( நீள்கவிதை ) - 2012
  • அகதியின் குழந்தை - (குறுங்கவிதைகள் )-2018
  • ஊன்றுகோல் (நாவல்) - 2022
"https://tamilar.wiki/index.php?title=கா._சுஜந்தன்&oldid=2555" இருந்து மீள்விக்கப்பட்டது