கா. உதயசங்கர்

கா. உதயசங்கர் (பிறப்பு: 10 பெப்ரவரி 1960) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார்[1]. இவர் சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை போன்றவற்றை எழுதி வருகிறார்.[2] இவருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரசுக்கர் விருது ஆதனின் பொம்மை என்ற குழந்தை இலக்கிய நூலிற்காக வழங்கப்பட்டது.[3]

கா. உதயசங்கர்
கா. உதயசங்கர்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கா. உதயசங்கர்
பிறந்ததிகதி 10 பெப்ரவரி 1960 (1960-02-10) (அகவை 64)
பிறந்தஇடம் கோவில்பட்டி, பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், சென்னை மாநிலம் (தற்போது
தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா
பணி கவிஞர், கட்டுரையாளர், புதின ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர்
குடியுரிமை இந்தியர்
கல்வி இளங்கலை (வேதியியல்)
குறிப்பிடத்தக்க விருதுகள் பால சாகித்திய புரசுக்கர் விருது (2023)
பெற்றோர் கமலம் (தாய்)
ச. கார்மேகம் (தந்தை)
துணைவர்
மல்லிகா (தி. 1987)
பிள்ளைகள் நவீனா
துர்கா

பிறப்பு

இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் 10 பெப்ரவரி 1960 அன்று கமலம் - ச. கார்மேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார் உதயசங்கர்.

கல்வியும் பணியும்

இவர் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றவர். இந்திய இரயில்வேயில் பணி செய்தவர்.

இலக்கியப்படைப்புகள்

சிறுகதை நூல்கள்

  • யாவர் வீட்டிலும்
  • நீலக்கனவு
  • மறதியின் புதைசேறு
  • உதயசங்கர் கதைகள்
  • ஒரு விளக்கும் இரண்டு கண்களும்
  • பிறிதொரு மரணம்
  • கண்ணாடிச்சுவர்கள்
  • குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு
  • தூரம் அதிகமில்லை
  • பின்பு பெய்தது மழை
  • மீனாளின் நீலநிறப்பூ
  • துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்

குறுநாவல்

  • ஆனால் இது அவனைப்பற்றி

கவிதை நூல்கள்

  • ஒரு கணமேனும்
  • காற்றைவாசி
  • தீராது
  • எனவே
  • தீராத பாடல்

குழந்தை இலக்கியம்

  • தலையாட்டி பொம்மை (குழந்தைப்பாடல்கள்)
  • பச்சை நிழல் (சிறுவர் கதைகள்)
  • குழந்தைகளின் அற்புத உலகில் (கட்டுரைகள்)
  • மாயக்கண்ணாடி (சிறுவர் கதைகள்)
  • பேசும் தாடி (சிறுவர் நாவல்)
  • விரால் மீனின் சாகசப்பயணம்
  • கேளு பாப்பா கேளு (குழந்தைப்பாடல்கள்)
  • பேய் பிசாசு இருக்கா? (கட்டுரைகள்)
  • ரகசியக் கோழி (சிறுவர் கதைகள்)
  • அண்டாமழை (சிறுவர் கதைகள்)
  • ஏணியும் எறும்பும் (சிறுவர் கதைகள்)
  • மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
  • மாயாவின் பொம்மை (சிறுவர் கதைகள்)
  • சூரியனின் கோபம் (சிறுவர் கதைகள்)
  • குட்டி இளவரசனின் குட்டிப்பூ
  • புலிக்குகை மர்மம்
  • ஆதனின் பொம்மை
  • பொம்மைகளின் நகரம்
  • அலாவுதீனின் சாகசங்கள்

மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு

  • வாயும் மனிதர்களும்
  • தயா
  • புத்தகப்பூங்கொத்து – குழந்தைகளுக்கான படக்கதைகள்
  • புத்தகப்பரிசுப்பெட்டி – குழந்தைகளுக்கான படக்கதைகள்
  • லட்சத்தீவின் கிராமியக்கதைகள்
  • லட்சத்தீவின் இராக்கதைகள்
  • மீன் காய்க்கும் மரம்
  • மரணத்தை வென்ற மல்லன்
  • பறந்து பறந்து
  • அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்
  • இயற்கையின் அற்புத உலகில்
  • பாருக்குட்டியும் அவளது நண்பர்களும்
  • சப்தங்கள் வைக்கம் முகமது பசீர்
  • கண்ணாடி பார்க்கும் வரையிலும் தொகுப்பு
  • மாதவிக்குட்டியின் கதைகள் மாதவிக்குட்டி
  • நட்சத்திரம் வீழும் நேரத்தில்
  • லால் சலாம் காம்ரேட் இ.எம்.எஸ் (கட்டுரைகள்)
  • தாத்தா மரமும் நட்சத்திரப்பூக்களும்
  • கதைகேளு கதைகேளு காக்காவின் கதைகேளு
  • காலக்கனவுகள்

ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு

  • சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்
  • பயங்களின் திருவிழா
  • சிரிக்க வைக்கச் சில கதைகள்
  • வேம்புத்தாத்தா
  • குட்டிப்பெண்ணும் காளான்களும்

கட்டுரை நூல்கள்

  • முன்னொரு காலத்தில்
  • நினைவு என்னும் நீள்நதி
  • சாதிகளின் உடலரசியல்
  • எது மருத்துவம்
  • காந்தீயத்தை விழுங்கிய இந்துத்வா
  • வேதகாலத்திற்கு திரும்ப முடியுமா?

பதவிகள்

உதயசங்கர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளராகச் செயலாற்றி வருகிறார். 2021 முதல் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் செயலாற்றி வருகிறார்.[4]

விருதுகள்

  • லில்லி தேவசிகாமணி நினைவு சிறுகதை நூல் விருது - 1993
  • தமுஎகச புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை நூல் விருது - 2008
  • உலகத்தமிழ் பண்பாட்டு மைய விருது – 2015
  • எஸ். ஆர். வி. பள்ளியின் படைப்பூக்க விருது - 2016
  • கலை இலக்கியப் பெருமன்றம் – சிறுவர் இலக்கிய விருது – 2016
  • விகடன் விருது – சிறுவர் இலக்கிய விருது - 2016
  • கு.சி.பா. நினைவு - சிறுவர் இலக்கிய விருது – 2017
  • நல்லி - திசைஎட்டும் மொழிபெயர்ப்பு விருது - 2017
  • தமிழ் பேராயத்தின் அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - 2017
  • கவிதை உறவு சிறுவர் இலக்கிய விருது - 2018
  • அறம் தமுஎகச படைப்பாளர் விருது - 2019
  • பால சாகித்திய புரசுக்கர் விருது - 2023[3]

தனி வாழ்க்கை

12 ஏப்ரல் 1987 அன்று மல்லிகா என்பவரைத் திருமணம் செய்தார் உதயசங்கர். இவ்விணையருக்கு நவீனா, துர்கா என்ற மகள்கள் உள்ளனர், இருவரும் ஓமியோபதி மருத்துவர்கள் ஆவர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கா._உதயசங்கர்&oldid=3774" இருந்து மீள்விக்கப்பட்டது