கார்த்திகேசு மதியாபரணம்

கார்த்திகேசு மதியாபரணம்(மார்ச் 25, 1937) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். பல நாட்டுக் கூத்துக்களையும், கதைவழிக் கூத்துக்களையும் பழக்கி அரங்கேற்றினார். மாற்றங்களைப் புகுத்தாது மரபு வழியில் நாட்டுக் கூத்தினைப் பழக்கி மேடையேற்றிய கலைஞர்.

கார்த்திகேசு மதியாபரணம்
கார்த்திகேசு மதியாபரணம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கார்த்திகேசு மதியாபரணம்
பிறந்ததிகதி மார்ச் 25, 1937

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை அரியாலையில் மார்ச் 25, 1937-ல் பரமு கார்த்திகேசுவிற்கு மகனாகப் பிறந்தார். தந்தை நாட்டுக்கூத்து, மத்தள அண்ணாவியார். தந்தையின் மூலமாக கூத்துக்களின் மேல் பற்றுகொண்டார்.

கலை வாழ்க்கை

மதியாபரணம் 1969-ல் தந்தையார் பழக்கிய "குசலவன்" நாட்டுக் கூத்திற்கு கொப்பி பார்ப்பவராக இருந்து கற்றுக்கொண்டார். 1968, 1970, 1974, 1975, 1978-ம் ஆண்டுகளில் குரும்பசிட்டி, புங்குடுதீவு, அரியாலை ஆகிய இடங்களில் கூத்துக்களை அரங்கேற்றினார். 1998-ல் பாரம்பரிய கலைகள் மேம்பாட்டு நாட்டுக்கூத்துக் கழகம் நடத்திய போட்டியில் நாட்டுக்கூத்துக்குரிய கதையம்சம், வரவு, விருத்தகம், தரு, கொச்சகம், கொச்சத்தரு(ஆட்டம்), கல்வெட்டு, ஆசிரியம், நாட்டுக் கூத்துக்குரிய வசன நடை, நாட்டுக் கூத்து ஆட்டமுறை போன்ற சகல அம்சங்களும் அமையக்கூடியதாக "குசலவன்" நாட்டுக்கூத்தை அரங்கேற்றினார். "வாளபீமன்" நரட்டுக் கூத்தினை தனது சகோதரர் நா.கணபதிப்பிள்ளை அவர்களோடு இணைந்து பழக்கி அரங்கேற்றினார். நாட்டுக்கூத்து மட்டுமல்லாமல் "கோவலன் கதை" (சிலம்பின் வெற்றி என்ற பெயரில்), புலந்திரன் களவு , அல்லி அர்ச்சுனா ஆகிய மூன்று கதைவழிக் கூத்துக்களையும் பழக்கி அரங்கேற்றினார். இவரது கலைப் படைப்புக்கள் யாவும் அரியாலை, பத்மாகலா மன்றத்தின் தயாரிப்பாகவே அரங்கேற்றப்பட்டன.

மறைவு

கார்த்திகேசு மதியாபரணம் 22 ஜூலை 2000 ல் மறைந்தார்.

விருதுகள்

  • 1998-ல் பாரம்பரிய கலைகள் மேம்பாட்டு நாட்டுக்கூத்துக் கழகம் நடத்திய போட்டியில் "குசலவன்" கூத்திற்காக இரண்டாவது பரிசு பெற்றார்.

நடித்த கூத்துகள்

  • குசலவன்
  • வாளபீமன்
  • கோவலன் கதை
  • புலந்திரன் களவு
  • அல்லி அர்ச்சுனா

உசாத்துணை