கார்கி (திரைப்படம்)

கார்கி என்பது அரிஅரன் ராசூ & கௌதம் ராமச்சந்திரன் ஆகியோரால் எழுதப்பட்டு 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் சட்ட நாடகத் திரைப்படமாகும், இது கௌதம் ராமச்சந்திரனால் இயக்கப்பட்டது, பிளாக்கி, செனி & மை லெஃப்ட் ஃபுட் புரொடக்சன் தயாரிப்பில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம்.[1][2][3] கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை சிரேயந்தியும் பிரேம்கிருட்டிணா அக்காதும் படத்தொகுப்பை சபீக் முகமது அலி ஆகியோரும் செய்துள்ளனர். கார்கி 15 சூலை 2022 அன்று திரையரங்குகளில் வெளியானது.[4][5]

கார்கி
இயக்கம்கௌதம் இராமச்சந்திரன்
தயாரிப்புஇரவிச்சந்திரன் இராமச்சந்திரன்
தாமஸ் ஜார்ஜ்
ஐஸ்வர்யா லட்சுமி
கௌதம் இராமச்சந்திரன்
கதைஅரிஅரன் ராசு
கௌதம் இராமச்சந்திரன்
இசைகோவிந்த் வசந்தா
நடிப்புசாய் பல்லவி
ஒளிப்பதிவுஸ்ரையந்தி
பிரேம்கிருஷ்ணா அக்காட்டு
படத்தொகுப்புஷபீக் முகமது அலி
கலையகம்Blacky, Genie & My Left Foot Productions
விநியோகம்சக்தி பிலிம் பேக்டரி
2 டி எண்டர்டெய்ன்மென்ட்
Paramvah Studios
வெளியீடுசூலை 15, 2022 (2022-07-15)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

கார்கி ( சாய் பல்லவி ) ஒரு பள்ளி ஆசிரியை, பணத்தேவைக்கு சிரமப்படும் அவரது குடும்பத்தில் அவரது தங்கை அசரா நடுநிலைப் பள்ளியில் படிக்கிறார், தந்தை பிரம்மானந்தா ( ஆர்.எஸ். சிவாஜி ) ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் காவலாளியாகவும் தாய் வீட்டில் அரிசி மாவு விற்றும் பிழைப்பு நடத்துகின்றனர். . ஒரு குழந்தையைத் தாக்கியதாக அவரது அப்பா மேலும் 4 ஆண்களுடன் சேர்ந்து குற்றம் சாட்டப்பட்டபோது அவர்களின் வாழ்க்கை சிக்கலடைகிறது. கார்கி தன் அப்பாவை நிரபராதி என்பதை நிரூபிப்பதில் உறுதியுடன் இருக்கிறார், ஒரு வக்கிரமான ஆசிரியரிடமிருந்து குழந்தையாக இருந்து அவளைப் பாதுகாத்து, அத்தகைய தீமைக்கு எதிராக நிற்க அவளை ஊக்குவிக்கிறார், அதனால் அவர் இவரின் முன்மாதிரி நாயகனாக திகழ்கிறார்.

இக்குற்றச்சாட்டால் பொது மக்கள் இவர்களை வெறுக்கின்றனர், குடும்ப நண்பரான வெற்றிகரமான வழக்கறிஞராலும் ( ஜெயபிரகாஷ் ) அவர்கள் கைவிடப்படுகிறார்கள். ஆனால், அவரது உதவியாளரும், சொல்லிக்கொள்ளும் படி இல்லாத வழக்கறிஞருமான இந்திரன் கலியபெருமாள் ( காளி வெங்கட் ), அவர் இழப்பதற்கு எந்த நற்பெயரும் இல்லாததால், அவர்கள் சார்பில் வாதாட ஒப்புக்கொள்கிறார். விசாரணையில், விசாரணை அதிகாரியை விசாரிக்கும் போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அதிக அளவிலான பார்பிட்யூரேட்டுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதை இந்திரன் கண்டுபிடிக்கிறார், இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் (பிரம்மானந்தாவை குற்றவாளி என அடையாளம் காட்டுவது) ஏற்றுக்கொள்ள முடியாதது என்கிறார்.

மேலும், இந்திரன் பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பாவை சந்திந்தித்த பொழுது அவர் தான் பிரம்மானந்தாவை (அவரது குற்றத்தில் உறுதியாக இருந்தார்) தன் மகளை அடையாளம் காட்டச்சொன்னார் என்பது தெரிகிறது, ஏனெனில் அவள் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு செயல்பட முடியாமல் இருந்தாள். இவை அனைத்தும் ஆதாரங்களை கேள்விக்குள்ளாக்குறள் ஆக்கியதான் காரணமாக பிரம்மானந்தாவுக்கு நிபந்தனை பிணை பெற உதவியது.

குற்றம் நடந்த நாளில் நாள் முழுவதும் வீட்டில் இருந்ததாக முன்னர் கூறிய அவளது அப்பாவின் சக ஊழியர் ( லிவிங்ஸ்டன் ) கவனக்குறைவாக, குடி மயக்கத்தில், உண்மையில் குழந்தை அங்கே கிடப்பதை முதலில் கண்டுபிடித்து, பிரம்மானந்தாவை எச்சரித்ததை அறியாமல் வெளிப்படுத்தினார்., அந்த நேரத்தில் தான் குடித்திருந்ததாக தன் அப்பாவின் கூற்றுகளை கார்கி சந்தேகிக்கத் தொடங்குகிறாள். மீண்டும் குழந்தையைச் சந்தித்து 5வது குற்றவாளியின் படத்தைக் காட்டி தன் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறாள்.

குழந்தை அவரை அடையாளம் கண்டுகொண்டபோது, பிரம்மானந்தா உண்மையில் குற்றவாளி என்பது தெரியவந்தது, இது அவரை கைது செய்து தண்டனை பெற வழிவகுத்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுடனும் அவளது தந்தையுடனும் சமரசம் செய்து கொண்டு அவளும் அவளது குடும்பமும் வாழ்க்கையை முன் நடத்துகிறது.

நடிகர்கள்

வெளியீடு

கார்கி 2022 சூலை 15 அன்று தமிழுடன் மொழிமாற்றம் செய்யப்பட்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[6][4][5]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கார்கி_(திரைப்படம்)&oldid=32203" இருந்து மீள்விக்கப்பட்டது