காயத்ரி (புதினம்)
காயத்ரி, 1970 களில் தினமணி கதிரில் சுஜாதாவால் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் கிழக்குப் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
காயத்ரி | |
நூலாசிரியர் | சுஜாதா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | கிழக்குப் பதிப்பகம் [1] |
ISBN | 978-81-8493-451-9 |
கதைக் கரு
எழுத்தாளர் ஒருவருக்கு பழைய புத்தகக்கடையில் விசித்திரமான சம்பவங்களைக் கொண்ட ஒரு நோட்டு கிடைக்கிறது. புதிதாக மணமுடித்து வரும் ஒரு பெண் தனது புகுந்தவீட்டில் இருப்பவர்களின் மர்மமான நடவடிக்கைகளை எழுதி வைத்து தன்னைக் காப்பாற்றுமாறு கோருகிறாள். எழுத்தாளர் வக்கீல் கணேஷிடம் உதவி கேட்கிறார். அந்த மர்ம வீட்டில் நடந்தது என்ன, அப்பெண்ணை மீட்டார்களா என்பதே கதை.
கதை மாந்தர்கள்
- கணேஷ்
- வசந்த்
- காயத்ரி
- ராஜரத்னம்
- சரஸூ
- சாமிநாதய்யர்
- இந்திரா
- நிர்மலா மற்றும் பலர்.
திரைப்படம்
இப்புதினம் 1977 ஆம் ஆண்டு தமிழில் திரைப்படமாக்கப்பட்டது. ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜெய்சங்கர், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.