காந்திகிரி (திரைப்படம்)
காந்திகிரி (Gandhigiri (இந்தி: गांधीगीरी) என்பது 2016 ஆண்டைய பாலிவுட் திரைப்படமாகும். இப்படத்தில் ஓம் பூரி,[1] சஞ்சை மிஸ்ரா, பிஜேஷ் கர்னிவால், அனும் ஷ்யாம், முகேஷ் திவாரி, டோலி சாவ்லா, மேகனா ஹால்டர், ரிஷி பூட்டானி, ரவி சிங், ராம் சுஜான் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை சனோஜ் மிஸ்ரா இயக்க, சுதிர் ஜெயின் மற்றும் பிரதாப் சிங் யாதவ் ஆகியோர் தங்கள் ஆகாமன் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் பதாகையின்கீழ் தயாரித்துள்ளனர்.[2]
காந்திகிரி Gandhigiri | |
---|---|
இயக்கம் | சனோஜ் மிஸ்ரா |
தயாரிப்பு | சுதிர் ஜெயின் மற்றும் பிரதாப் சிங் யாதவ் |
திரைக்கதை | சனோஜ் மிஸ்ரா |
இசை | சாகுல் ரயான் சிவம் பதாக் |
நடிப்பு | ஓம் பூரி சஞ்சை மிஸ்ரா அக்சை சிங் முகேஷ் திவாரி டோலி சாவ்லா கேகனா ஹல்தார் ரிஷி புட்டானி |
ஒளிப்பதிவு | ரவி சந்தன், நீடு இக்பால் |
படத்தொகுப்பு | அர்சிட் டி ரஸ்தோகி |
கலையகம் | ஆக்மன் ஃபிலிம்ஸ் பிரவேட். லிமிடட். |
வெளியீடு | 14 அக்டோபர் 2016(India) |
ஓட்டம் | 128 |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
தயாரிப்பு
இப்படத்தின் படப்பிடிப்பானது இலக்னோ மற்றும் ரேபரேலியில்[3] துவங்கியது. அதையடுத்த வந்த மாதங்களில் உத்திரப்பிரதேசத்தில் நீண்டகாலம் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
குழுவினர்
காந்திகிரி படமானது ஆக்மன் பிலிம்ஸ் பிரைவேட். லிமிடெட்டால் தயாரிக்கப்பட்டது.[4] படத்தை சனோஜ் மிஸ்ரா இயக்க, படல்களை அன்கிட் திவாரி, சுனிதா சௌஹான், முகம்மது இர்ஃபான், சுஜதா மஜும்தார், மஷா ஆகியோர் பாடியுள்ளனர். படத்தொகுப்பை ஆர்சிட் டி ரஸ்டோகி மேற்கொண்டார். ஒலிப்பதிவை சுபாஷ் சஹூ மேற்கொள்ள, பின்னணி இசையை சலில் அம்ருத் மேற்கொண்டார். படத்தின் இணை இயக்குநராக - விகாஸ் குமார் சிங் பணியாற்றியுள்ளார்.
கதைச்சுருக்கம்
இன்றைய ஊழல் நிறைந்த உலகில் காந்தியின் நடத்தை முறைகளின் முக்கியத்துவம் என்ன? எவராவது இந்த நடத்தை முறைகளை கொண்டுள்ளார்களா? அன்றாட வாழ்க்கையில் அந்த நடத்தை முறைகளை செயல்படுத்துபவர் அமைதியான வாழ்க்கையை வாழ முடியுமா? இது போன்ற கேள்விகளுக்கு காந்திகிரியில் பதில்களைக் காணலாம். வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்புவரான ராய் சாஹேப் காந்தியின் கொள்கைகளை உறுதியாக நம்புகிறார். அவரது தந்தை தீவிர சுதந்திர போராட்ட வீரராவார். அவருடன் இவர் நெருக்கமாக பிணைப்பைக் கொண்டிருந்தார். இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர், ராய் சாஹெப் தவறான பாதையில் நடக்கும் வெவ்வேறு நபர்களை சந்திக்கிறார். இன்றைய காலகட்டத்தில் காந்தியின் நடத்தை முறைகளின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்த ராய் சாஹேப் மேற்கொண்ட முயற்சிகளை இப்படம் அழகாக காட்சிப்படுத்தியுள்ளது.
நடிகர்கள்
- ராய் சாஹேப்பாக ஓம் பூரி
- பியாகி சிங்காக சஞ்சை மிஸ்ரா
- பன்சாயாக பிரிஜேஷ் கர்னிவால்
- கிராந்தி பாண்டேவாக அனுப்பம் ஷியாம்
- நட்வர்லாலாக முகேஷ் திவாரி
- ஜெயந்தியாக மேகனா ஹால்டர்
- திசாவாக டோலி சாவ்லா
- ஆய்வாளராக அமித் சுக்லா
- யுவராஜாக ரிஷி பூட்டானி
- ராஜாராம் பாண்டேவாக ரவி சிங்
- சல்ஃசா பாபாவாக ராம் சுஜன் சிங்
- தனஞ்சய் பாண்டேவாக நவீன் சர்மா
- விக்ராந்த் ஆனந்த் (சிறப்புத் தோற்றம்)
மேற்கோள்கள்
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Om-Puri-shoots-Gandhigiri-in-Lucknow/articleshow/47232562.cms
- ↑ http://zeenews.india.com/entertainment/movies/om-puri-shoots-gandhigiri-in-lucknow_1593411.html
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Om-Puri-shoots-in-Lucknow/articleshow/47211342.cms?
- ↑ http://indianexpress.com/article/entertainment/bollywood/om-puri-shoots-gandhigiri-in-lucknow/