காதலன் (திரைப்படம்)
காதலன் (Kadhalan) 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு தேவா, நக்மா, வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பிரேமிக்குடு என்ற பெயரில் தெலுங்கிலும், ஹம்சே ஹாய் முக்காபலா என்ற பெயரில் இந்தியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, நக்மாவிற்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.[1][2][3]
காதலன் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஷங்கர் |
தயாரிப்பு | கே. டி. குஞ்சுமோன் |
கதை | பாலகுமாரன் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | பிரபு தேவா நக்மா வடிவேல் கிரிஷ் கார்னாட் ரகுவரன் எஸ்.பி பாலசுப்பிரமணியம் |
வெளியீடு | பிப்ரவரி 19, 1994 |
ஓட்டம் | 166 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
நடிகர்கள்
- பிரபுதேவா - பிரபு
- நக்மா - சுருதி
- வடிவேலு (நடிகர்) - வசந்த்
- ரகுவரன் - மாலி என்கிற மல்லிகார்ஜூனா
- கிரீஷ் கர்னாட் - காக்கர்லால் சத்தியநாராயணா
- எஸ். பி. பாலசுப்பிரமணியம் - கதிரேசன்
- அல்லு ராமலிங்கம் - சுருதியின் தாத்தா
- மனோரமா - சுருதியின் பாட்டி
- அஜய் ரத்தினம்
- பாலகுமாரன் - கல்லூரி பிரின்ஸ்பெல்
- தாமு - பிரபுவின் நண்பன்
- கவிதா - சுருதியின் அம்மா
- பத்மப்பிரியா - பிரபுவின் அம்மா
- ஷங்கர் (திரைப்பட இயக்குநர்) - கௌரவத் தோற்றம்
- ராஜூ சுந்தரம் - கௌரவத் தோற்றம்
- குரல் கொடுத்தவர்கள்
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
மாணவர்கள் தலைவராக பதவி வகிக்கும் பிரபு (பிரபு தேவா) தமிழக ஆளுனரான காக்கர்லா சத்யநாராயனா சிறப்பு விருந்தினராகப் பங்குபெறும் விழாவிற்கு அழைப்புவிடுக்கச் செல்லும் பிரபு அங்கு அவர் மகளான ஸ்ருதியைக் காண்கின்றார். அப்பெண்ணின் அழகில் மயங்கும் பிரபு அவரைத் தனது கனவுக்கன்னியாகவும் தேர்ந்தெடுத்துக் காதலிக்கின்றார். பல பிரச்சனைகளின் பின்னர் இவரும் இவரின் நண்பரும் சேர்ந்து ஸ்ருதியினைப் பற்றிய பல தகவல்களைப் பெற முயற்சிக்கின்றனர். இவரைப் பின்தொடர்ந்து செல்லும் பிரபு அவர்தன் காதலியைக் கவரும் வகையில் பலமுறைகள் முயற்சிகள் செய்தும் தோற்றுப்போகின்றார். இறுதியில் அவர் வீட்டிற்குள்ளேயே சென்று பரத நாட்டியம் ஆடி தன் காதலியின் முகத்தினை வரைந்து காதலியின் மனம் கவர்கின்றார் பிரபு. இந்நிகழ்வைத் தொடர்ந்து பிரபுவைக் காதலிக்கின்றார் ஸ்ருதி. இவர்கள் இருவரின் காதலினை அறியும் ஸ்ருதியின் தந்தையும் பிரபுவின் மீது பொய்வழக்கு போட்டு காவல்துறையில் முறையிடுகின்றார். பிரபுவைக் கைதுசெய்யும் காவல்துறையினர் அவரை காவல்துறையில் பணிபுரியும் அவர் தந்தையின் மூலம் அடித்துக் கொடுமைப்படுத்துகின்றனர். பின்னர் தன் மகனை அடித்துவிட்டோம் என தெரிந்து மனம் நொந்து போகின்றார் பிரபுவின் தந்தை. இதற்கிடையில் ஸ்ருதியின் தந்தையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுமக்களின் மீதான தீவிரவாத தாக்குதலை செய்ய முயலும் ரகுவரன் பின்னைய காலங்களில் அவர் தன்னை ஏமாற்றிவிட்டதனை அறிந்து ஸ்ருதியின் தந்தையைக் கொல்ல முயல்கின்றார். ஸ்ருதியின் தந்தை மற்றும் ஸருதி போன்றவர்களைக் காப்பாற்றும் பிரபு பின்னர் ஸ்ருதியுடன் சேர்கின்றார் என்பதே திரைக்கதை.
மேற்கோள்கள்
- ↑ Rajitha (17 April 1998). "Vim and vigour" இம் மூலத்தில் இருந்து 21 February 1999 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/19990221141856/http://www.rediff.com/entertai/1998/apr/17pras.htm.
- ↑ Suresh, M. G. (1 May 1998). "What makes baby-face Prasanth tick?". இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 4 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130904025759/http://web.archive.org/web/20110725211901/http://www.cscsarchive.org%3A8081/MediaArchive/art.nsf/%28docid%29/7E0D2A4A454A69DF65256940004B7BA2.
- ↑ Ramanan, V. V. (5 July 2014). "Cinema Quiz". தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150201164130/http://www.thehindu.com/features/cinema/cinema-quiz/article6180476.ece.