காண்டிகை உரை

காண்டிகை உரை என்பது சூத்திரம் எனப்படும் நூற்பாவிற்கு உரை எழுதும்போது அவ்வுரை எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கான இலக்கணமாகும்.

கருத்துரை, பதவுரை, தேவையான எடுத்துக்காட்டுகள் கொடுத்தல், இடையிடையே வினாவை எழுப்பி அதற்கான விடையையும் உடன் சேர்த்து நூற்பாவின் உட்பொருளை விளக்குதல் என்பன காண்டிகை எனப்படும் உரையாகும் என்கிறது நன்னூல்.[1]


அடிக்குறிப்புகள்

  1. கருத்து பதப்பொருள் காட்டு மூன்றினும்
    அவற்றொடு வினாவிடை யாக்க லானும்
    சூத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை. - நன்னூல் (22)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=காண்டிகை_உரை&oldid=20275" இருந்து மீள்விக்கப்பட்டது