காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில்

காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் எனும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். காஞ்சி சர்வதீர்த்தம் தெங்கரையில் உள்ள கிழக்கு பார்த்த சன்னதியான இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது. (இக்கோயில் பற்றிய விபரம் சரிவர தெரியவில்லை.)[1]

காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில்
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மல்லிகார்ச்சுனேஸ்வரர்.

வழிப்பட்டோர்

ஈசுவரன் மல்லிகார்சுனர் என்னும் பெயருடன் எழுந்தருளி இருக்கின்றார். இது பல முனிவர்கள் பூசித்து வழிபட்ட தலமாகும்.[2]

அமைவிடம்

இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின் காஞ்சி சர்வதீர்த்தம் தென்கரையில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் 1 மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[3]

போக்குவரத்து

மேற்கோள்கள்

  1. "shaivam.org | மல்லிகார்ஜுனர் கோயில்". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-04-18.
  2. "palsuvai.net|காஞ்சிபுர சிவலிங்கங்கள்|24. ஸ்ரீ மல்லிகார்ஜூனர்". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-04-18.
  3. dinaithal.com | மல்லிகார்ஜுனர் கோயில்
  4. tripadvisor.in 15 temples in Kanchipuram

புற இணைப்புகள்