காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில்

காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில் (பலபத்திரராமேசம்) என்று அறியப்படும் இக்கோயில், காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும், திருமால் பலராம (8) அவதாரத்தின் போது வழி பட்ட இத்தல குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]

காஞ்சிபுரம் பலபத்திரராமேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் பலபத்திரராமேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பலபத்திரராமேசுவரர்.

இறைவர், வழிபட்டோர்

  • இறைவர்: பலபத்திரராமேஸ்வரர்.
  • வழிபட்டோர்: பலராமர்.

தல வரலாறு

தீர்த்த யாத்திரை சென்ற பலராமர் சரசுவதி தீரத்தை அடைந்து அங்குள்ள முனிவர்களிடம் காஞ்சியின் பெருமைகளைக் கேட்டறிந்து, பின்னர் காஞ்சி வந்து திருவேகம்பத்தை பணிந்து, அங்கு வீற்றிருந்தருளும் உபமன்யு முனிவரிடம் தீட்சையும்பெற்று, தன் பெயரில் பலபத்திரராமேசுவரர் என்று சிவலிங்கமொன்றை பிரதிட்டை செய்து வழிபட்டார். மகிழ்ந்த இறைவன் அவர்முன் தோன்றி நீங்காத பக்தியை அருளிச் செய்தார். மேலும் அச்சிவலிங்கத்திடத்தே எழுந்தருளியிருந்து அதனை வழிபடுவோருக்கு வேண்டிய போக மோட்சங்களை அருளவும் இசைந்தருளினார் என்பது வரலாறு.[2]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்கு பகுதியான பிள்ளையார் பாளையத்தில், திருமேற்றித் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் பசுமையான சூழலில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. Project Madurai, 1998-2008 | சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 | 31. பலபத்திர ராேமசப்படலம் 1088 - 1105.
  2. tamilvu.org | காஞ்சிப் புராணம் | பலபத்திர ராமேசப் படலம் | பக்கம்: 337 - 341
  3. "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | பலபத்திரராமேசம்". Archived from the original on 2016-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-02-24.

புற இணைப்புகள்