காஞ்சிபுரம் கங்காவரேசுவரர் கோயில்

காஞ்சிபுரம் கங்காவரேசுவரர் கோயில் (கங்காவரேஸ்வரம்) எனப் பெயர்பெற்ற இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். இது, சர்வ தீர்த்தம் கிழக்கு கரையில் உள்ள மேற்கு பார்த்த சன்னதியாகும் மேலும், இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

காஞ்சிபுரம் கங்காவரேஸ்வரம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் கங்காவரேஸ்வரம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கங்காவரேஸ்வரர்.

இறைவர், வழிபட்டோர்

தல வரலாறு

  • கங்கையும், வருணமும் வழிபட்டு வரம் பெற்றத் தலம்.
  • கங்கை வழிபட்டு வரம்பெற்றமையின் இது கங்காவரேஸ்வரம் எனப்பட்டது.[2]
  • வருணன் கங்காதேவியோடு சேர்ந்து இறைவனை பூஜித்து நீருக்கும், நீர்வாழ் உயிர்களுக்கும் தலைவனாதலைப் பெற்றனன். இத்தலம் "கங்காவரேஸ்வரம்" எனப்படும்.[3]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் வேலூர் செல்லும் சாலையிலுள்ள சர்வதீர்த்தத்தின் (குளத்தின்) கிழக்கு கரையில் இக்கோவில் தாபிக்கப்பட்டள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. மற்றும் காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து, காஞ்சி கச்சபேசுவரர் கோயிலின் வழியாக காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[4]

மேற்கோள்கள்

  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 46. சர்வ தீர்த்தப்படலம் (1619 - 1644) | 1638 கங்காவேரச்சரம்
  2. "shaivam.org | காஞ்சிபுர சிவலிங்கங்கள் | கங்காவரேஸ்வரம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-22.
  3. "palsuvai.net | காஞ்சிபுர சிவலிங்கங்கள் | 30. ஸ்ரீ கங்காதரேஸ்வரர்". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-03-22.
  4. "shaivam.org | சர்வ தீர்த்தக் கரை, கங்காவரேஸ்வரம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-22.

புற இணைப்புகள்