கவிப்பித்தன்
கவிப்பித்தன் (Kavipithan) (பிறப்பு : நவம்பர் 10, 1971) தமிழ்நாட்டின் வடமாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தில் வாழும் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை தொடர்ந்து எழுதிவரும் ஓர் எழுத்தாளர் ஆவார். அண்மைக்காலத் தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ( இன்றைய இராணிப்பேட்டை மாவட்டம்) வாலாசாபேட்டை வட்டத்தில் உள்ள நீவாநதிக்கரை (பொன்னை ஆறு) பொன்னை நகரம் வழி அமைந்துள்ள கிராமமான வசூர் என்கிற சிற்றூரில் கவிப்பித்தன் பிறந்தார்.[1]
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கவிப்பித்தன் Kavipithan |
---|---|
பிறந்தஇடம் | தமிழ்நாடு, இராணிப்பேட்டை மாவட்டம், வாலாசாபேட்டை, வசூர் கிராமம் |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியா |
கல்வி நிலையம் | அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, செய்யாறு |
இவரது இயற்பெயர் தேவராஜீ என்பதாகும். இதுவரை 5 சிறுகதைத் தொகுப்புகள், 2 நாவல்கள், 2 கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். பத்திரிகையாளராகப் பணியைத் துவக்கிய இவர் தற்போது தமிழக அரசின் வருவாய்த்துறையில் துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் எழுதிய “மடவளி” நாவல் சிறந்த நாவலுக்கான ஆனந்த விகடன் நம்பிக்கை விருதைப் பெற்றது. நீவாநதி என்ற நாவல் எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் தமிழ்ப்பேராயத்தின் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதை வென்றது. இவர் எழுதிய சிறுகதைகளுக்காக மேலும் சில விருதுகளையும் பெற்றுள்ளார். கல்கி, ஆனந்த விகடன்[2],
தினமணி கதிர், காமதேனு, இதயம் பேசுகிறது, தமிழ் அரசி, செம்மலர், நந்தன், கீற்று.காம், மலைகள்.காம். உள்ளிட்ட பத்திரிகைகளில் கவிப்பித்தனின் படைப்புகள் வெளிவந்துள்ளன.
வாழ்க்கைக்குறிப்பு
கவிப்பித்தன் வட தமிழ்நாட்டின் வடாற்காடு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட அன்றைய வேலூர் மாவட்டம், இன்றைய இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாசாபேட்டை வட்டத்தின் பொன்னை வழி. வசூர் என்ற சிற்றூரில் பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் இளம் அறிவியல் பட்டமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இவருக்குத் துணைவி மஞ்சுளா, மகள்கள் ஓவியா, சிந்து, மகன் நிலவழகன் ஆகியோர் உள்ளனர்.
எழுத்துலக அறிமுகம்
1993 ஆம் ஆண்டு செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும்போது ஒரு மேகத்தின் தாகம் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அதனைத் தொடரந்து சிறுபத்திரிககைளிலும், வணிக இதழ்களிலும் புதுக் கவிதைகள் எழுதிவந்த இவர் 2007 ஆம் ஆண்டில் தனது முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டடார். 2015 ஆம் ஆண்டு தனது முதல் நாவலாக “நீவாநதி”யை எழுதினார்.
எழுதிய நூல்கள்
கவிதை நூல்கள்
- ஒரு மேகத்தின் தாகம்- 1993
- யாருமற்ற கனவில் - 1999
சிறுகதை நூல்கள்
- இடுக்கி - 2007
- ஊர்ப்பிடாரி[3]- 2012
- பிணங்களின் கதை[4] - 2014
- சிப்பாய் கணேசன் - 2016
- சாவடி- 2019
- பாலி-2022
நாவல்கள்
விருதுகள், பரிசுகள்
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கவிஞர் கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு.[9]
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய எழுத்தாளர் மு.வரதராசனார் நுற்றாண்டு நினைவு சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு.
- ஊர்ப்பிடாரி சிறுகதைத் தொகுப்புக்கு 2012 ஆம் ஆண்டின் கவிதை உறவு விருது.
- பிணங்களின் கதை சிறுகதைத் தொகுப்புக்கு 2014 ஆண்டு ஜெயந்தன் விருது,[10] திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் விருது.
- மடவளி நாவலுக்கு 2017 ஆம் ஆண்டின் ஆனந்த விகடன் சிறந்த நாவலுக்கான நம்பிக்கை விருது.[11]
- நீவாநதி நாவலுக்கு 2018 ஆண்டின் தமிழ்பேராயத்தின் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது (விருதுத் தொகை ரூபாய்.1.25 லட்சம் + 25 ஆயிரம் )[12]
- 2021-ம் ஆண்டுக்கான ‘எழுச்சித் தமிழர் கலை இலக்கிய விருதுகள்' வழங்கும் விழாவில் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்காக கவிப்பித்தனின் பாலி சிறுகதைத் தொகுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு இவருக்கு எழுச்சித் தமிழர் விருது வழங்கப்பட்டது.[13]
மேற்கோள்கள்
- ↑ "eBooks and Audio Books Authors list". https://www.pustaka.co.in/home/authors.
- ↑ விமர்சனக்குழு, விகடன். "அடுத்து என்ன? - கவிப்பித்தன்" (in ta). https://www.vikatan.com/arts/literature/142103-kavipithan-whats-next.
- ↑ "ஊர்ப்பிடாரி நூல் வெளியீட்டு விழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-vellore/2012/sep/25/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-563903.html. பார்த்த நாள்: 23 June 2021.
- ↑ "பிணங்களின் கதை". தினமணி. https://www.dinamani.com/specials/nool-aragam/2014/dec/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-1039121.html. பார்த்த நாள்: 23 June 2021.
- ↑ "படிப்போம் பகிர்வோம்: வேலூர் நதி கொல்லப்பட்ட கதை" (in ta). https://www.hindutamil.in/news/environment/162923-.html.
- ↑ "மடவளி நாவல் வெளியீட்டு விழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/jul/03/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2730941.html. பார்த்த நாள்: 23 June 2021.
- ↑ "நூல்நோக்கு: பிணத்துக்கு உயிர் வந்தால் என்னவாகும்?". https://www.hindutamil.in/news/literature/665849-book-review.html. பார்த்த நாள்: 23 June 2021.
- ↑ "நூல் வெளி: நெடுஞ்சாலைத் துயரங்கள்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/literature/1120457-book-release.html. பார்த்த நாள்: 20 November 2023.
- ↑ "கந்தர்வஹன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2010/oct/30/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-262824.html. பார்த்த நாள்: 23 June 2021.
- ↑ "ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்:படைப்பாளிகளின் பட்டியல் வெளியீடு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2015/oct/07/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-1199356.html. பார்த்த நாள்: 23 June 2021.
- ↑ "மடவளி". பனுவல் இம் மூலத்தில் இருந்து 24 ஜூன் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210624204323/https://www.panuval.com/kavipithan/madaveli-10014634. பார்த்த நாள்: 23 June 2021.
- ↑ "SRM IST Tamil Perayam Academy Awards 2018". http://www.parkavakula.com/2019/10/srm-ist-tamil-perayam-academy-awards.html.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "எழுச்சித் தமிழர் கலை இலக்கிய விருதுகள்!" (in ta). https://www.hindutamil.in/news/literature/786360-literary-awards.html.