கவின் ஜெயராம்

கவின் ஜெயராம் (Kavin Jayaram) (பிறப்பு பிப்ரவரி 25, 1980), கவின் ஜே என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் மேடைச் சிரிப்புரை நடிகராவார்.[1] மேலும் மலேசியாவின் பண்பலை வானொலியான "ரெட் எஃப்எம்"மின "தி ரெட்ஜாம் என்ற நிகழ்ச்சியின் இணை தொகுப்பாளராகவும் இருந்தார்.

கவின் ஜெயராம்
பிறப்பு25 பெப்ரவரி 1980 (1980-02-25) (அகவை 44)
கோலாலம்பூர்
பணிமேடைச் சிரிப்புரை நடிகர், வானொலி அறிவிப்பாளர்

ஆரம்ப கால வாழ்க்கை

கவின் மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள மெதடிஸ்ட் சிறுவர் பள்ளியில் பயின்றார். 1997இல் இவர் நியூகேஸில் சவுத் டைன்சைட் கல்லூரியில் தனது படிப்பைத் தொடர்ந்து 2001இல் பட்டம் பெற்றார். பின்னர் இவர் கடல் சார் பொறியாளர் ஆனார். ஆனால் கவினின் மறைந்த சகோதரர் தான் ஒரு நகைச்சுவை நடிகராக வேண்டும் என்று விரும்பினார். இதனால் மே 2006இல் சகோதரரைன் மரணத்திற்குப் பிறகு ஒரு நகைச்சுவை நடிகராக வேண்டும் எனும் உணர்வு இவரை தீவிரமாக்கியது. ராபின் வில்லியம்ஸ், கிரிசு ரொக், எடி இசார்ட் ஆகியோரின் தாக்கம் இவரிடமிருந்தது.

தனிப்பட்ட வாழ்க்கை

கவின் மே 16, 2010 அன்று நிஷா கோபாலனை மணந்தார் [2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கவின்_ஜெயராம்&oldid=26952" இருந்து மீள்விக்கப்பட்டது