கவின்மலர்
கவின்மலர் தமிழகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்.[1][2] தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பிறந்து, நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கல்வியும், ஆரம்பகால பணியும்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் (ஏடிஎம். கல்லூரி) கணினித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆரம்பத்தில் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றியவர். ஊடகத்துறை மீது இருந்த ஆர்வம் காரணமாக பத்திரிக்கைத் துறையில் சேர்ந்தார்.
பணியாற்றிய பத்திரிகைகள்
- புதிய தலைமுறை பத்திரிக்கையில் ஆரம்பகால ஊழியர்.
- ஆனந்த விகடனில் தலைமை நிருபர்.
- தற்போது இந்தியா டுடேயின் தமிழ் பதிப்பில் அசோசியேட் காப்பி எடிட்டர்.
எழுத்தாளராக
ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் தொடர்ந்து தன் எழுத்தின் மூலமும், பேச்சின் மூலமும் செயல்பாட்டரங்கில் இருக்கிறார். தமிழ் இலக்கிய வட்டாரத்திலும் நன்கு அறியப்பட்ட பெண் எழுத்தாளரான[3] இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு 2014 சென்னை புத்தகக் காண்காட்சியில் கயல் கவின் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. தமிழ் இதழ்களில் கவிதை, கட்டுரை, சிறுகதை என தொடர்ந்து எழுதுவது மட்டுமல்லாமல் தொடர்ந்து மேடைகளிலும் பேசி வருகிறார்.
மேற்கோள்கள்
- ↑ "சாத்தான்குளம்: சமூக ஊடகங்களில் அத்துமீறல்களை கொண்டாடும் சில போலீஸார்" (in ta). https://www.bbc.com/tamil/india-53217137.
- ↑ "களத்திலிருந்து...: நாதியத்துக் கெடக்கோம்..." (in ta). https://www.hindutamil.in/news/opinion/columns/146588-.html.
- ↑ "பாஜகவை விமர்சித்த பெண் எழுத்தாளர் பற்றி முகநூலில் ஆபாசமாக பதிவிட்ட நபர்- வழக்குப்பதிவு செய்த காவல்துறை !" (in en-US). https://www.malaimurasu.com/tamilnadu/kavinmalar-womenwritter/.