கவறு
கவறு என்னும் சொல் கவலைகொள்ள வைப்பதைக் குறிக்கும். [2] சூதாடி இழந்த பொருளை மீட்கவேண்டும் எனக் கவலைக்கொள்ள வைப்பதால் இந்த விளையாட்டைக் கவறு என்றனர்.
நட்ட கவற்றினால் சூது இன்னா [3] என்னும் பாடலடிகளும் இதனைப் புலப்படுத்துகின்றன.
பிரியவிருக்கும் காதலனுக்கு அவன் காதலி வாழ்க்கை என்பது கவறுக்காய் போல ஏதோ ஒரு வாய்ப்பு என்று கூறுவதிலிருந்து இதனை உணர்ந்துகொள்ளலாம். [4]
இவற்றையும் பார்க்க
அடிக்குறிப்பு
- ↑
பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா
ஈரைம்பதின்மரும் போரெதிர்ந்து ஐவரொடு
ஏதில ராகி இடைவிண்டார் ஆதலால்
காதலொடு ஆடார் கவறு. – பழமொழி நானூறு 356 - ↑ பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற்றிணை 144
- ↑ இன்னா நாற்பது 26
- ↑ கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை – நற்றிணை 243