கலகலப்பு (திரைப்படம்)
கலகலப்பு என்பது கனடாவில் முதல் முதலாக தமிழில் தயாரிக்கப்பட்ட முழுநீள நகைச்சுவைத்திரைப்படமாகும். யாழ்ப்பாணத்தில், இணுவில் கிராமத்திலிருந்து "கலகலப்பு" என்ற நகைச்சுவை சஞ்சிகையை வெளியிட்டு வந்த எஸ். கேதீஸ்வரன் (எஸ். கே. தீசன்) என்ற கலைஞரே இத்திரைப்படத்தையும் உருவாக்கினார்.
கலகலப்பு | |
---|---|
இயக்கம் | எஸ். மதிவாசன் |
தயாரிப்பு | எஸ். கே. தீசன் |
கதை | எஸ். கே. தீசன் |
இசை | தாரணி மதிவாசன் |
நடிப்பு | எஸ். கே. தீசன் கரு. கந்தையா நீதன் நடா ஸ்ரீமுருகன் அனுராகவன் கேதீஸ்வரன் வி. எஸ். ராகவன் |
ஒளிப்பதிவு | தர்மராஜா |
நாடு | கனடா |
மொழி | தமிழ் |
இவருடன், கரு.கந்தையா, நீதன், ஸ்ரீமுருகன், அனுராகவன் கேதீஸ்வரன், நடா ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்தார்கள்.
இத்திரைப்படத்தை இயக்கியவர் எஸ்.மதிவாசன். படப்பிடிப்பை தர்மராஜாவும் இசையை தாரணி மதிவாசனும் பொறுப்பேற்றார்கள்.