கற்பகம் (திரைப்படம்)

கற்பகம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். 1964 இல் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது - இரண்டாவது சிறந்த படத்துக்கான தகுதிச் சான்றிதழ் பெற்றுள்ளது[1].

கற்பகம்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புகே. எஸ். சபரிநாத்
அமர் ஜோதி மூவீஸ்
இசைவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
நடிப்புஜெமினி கணேசன்
கே. ஆர். விஜயா
சாவித்திரி
முத்துராமன்
எம். ஆர். ராதா
எஸ். வி. ரங்கராவ்
வெளியீடுநவம்பர் 15, 1963
நீளம்4567 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆவார்கள். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி எழுதினார். ஒலிப்பதிவில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் ஒரே பின்னணி பாடகி பி. சுசீலா பாடினார். "அத்தை மடி மெத்தையடி" மற்றும் "மன்னவனே அழலாமா கண்ணீரை" பாடல்கள் புகழ் பெற்றன.[2][3]

பாடல்கள்
# பாடல்பாடகர் நீளம்
1. "ஆயிரம் இரவுகள் வருவதுண்டு"  பி. சுசீலா 4:14
2. "அத்தை மடி மெத்தையடி"  பி. சுசீலா 5:40
3. "பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்"  பி. சுசீலா 6:01
4. "மன்னவனே அழலாமா கண்ணீரை"  பி. சுசீலா 3:48
மொத்த நீளம்:
19:43

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கற்பகம்_(திரைப்படம்)&oldid=32001" இருந்து மீள்விக்கப்பட்டது