கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா, தமிழ்நாட்டின், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆண்டுதோறும் சங்கீத மும்மூர்த்திகள்[1] என அறியப்படும், கர்நாடக இசை அறிஞர்களான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் ஆகிய சங்கீத மும்மூர்த்திகளின் பிறந்த நாள் விழா, திருவாரூர் தியாகராஜர் கோயிலில் காஞ்சி சங்கர மடத்தின் கர்நாடக சங்கீத சேவா அறக்கட்டளை சார்பில் 1987ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. விழாவின் போது புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர்கள் கலந்ந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.[2][3][4]

பின்னணி

சியாமா சாஸ்திரிகள், தியாகராஜ சுவாமிகள் மற்றும் முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் 14 ஆண்டு கால இடைவெளியில் திருவாரூரில் பிறந்தவர்கள்.

  • 1762ல் திருவாரூரில் பிறந்த சியாமா சாஸ்திரிகள் தஞ்சாவூர் காமாட்சி அம்மனை தனது ஆத்மார்த்த தெய்வமாகப் பாவித்து, பல கீர்த்தனைகளை இயற்றியவர். நாகப்பட்டினம் நீலாயதாட்சி, திருவையாறு தர்மசம்வர்த்தனி, மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் மீது பல இனிமையான கீர்த்தனைகளை இயற்றியவர்.
  • 1767ல் திருவாரூரில் பிறந்த தியாகராஜர் இராமரைப் பலவாறு உருவகப்படுத்தி தெலுங்கு மொழியில் அதிக கீர்த்தனைகளை சுவைபட இயற்றியவர்.
  • 1776ல் திருவாரூரில் பிறந்த முத்துசுவாமி தீட்சிதர் திருவாரூர் தியாகேசர், கமலாம்பாள், மற்றும் கணபதி ஆகியோர் மீது அதிக கீர்த்தனைகளை இயற்றியவர். இவர் இயற்றிய நவாவரண கீர்த்தனைகள் சங்கீத உலகுக்கு மாபெரும் வரப்பிரசாதமாகும்.

இச்சங்கீத மும்மூர்த்திகள் வாழ்ந்த இல்லங்கள் இன்றளவும் திருவாரூரில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்