கர்ணன் (எழுத்தாளர்)

கர்ணன் 1938 - சூலை 20, 2020) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். மதுரையில் வசித்து வந்த இவர் எழுதிய "அவர்கள் எங்கே போனார்கள்?" எனும் நூல் தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிற சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

கர்ணன் (எழுத்தாளர்)
கர்ணன் (எழுத்தாளர்)
இயற்பெயர்/
அறியும் பெயர்
கர்ணன்
பிறந்ததிகதி 1938
பிறந்தஇடம் செல்லூர், மதுரை மாவட்டம்
இறப்பு சூலை 20, 2020 (அகவை 81–82)
தேசியம் இந்தியர்
அறியப்படுவது எழுத்தாளர்
பெற்றோர் பரஞ்சோதி,
செல்லம்மாள்[1]
துணைவர் ரஞ்சிதம்

வாழ்க்கைக் குறிப்பு

கர்ணன் 1938 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கர்ணன் பரஞ்சோதி, செல்லம்மாள் தம்பதியினரின் புதல்வர். இவர், தொழில் ரீதியாக தையற்கலைஞ‌ர் ஆவார். கர்ணன் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டுக் கால் ஊனமானவர்.

படைப்புகள்

  • கனவுப் பறவை (சிறுகதைத் தொகுப்பு)
  • கல்மனம் (சிறுகதைத் தொகுப்பு)
  • மோகமுக்தி
  • புலரும் முன் அழகிடும் பொழுது(சிறுகதைத் தொகுப்பு)
  • ஆத்ம நிவேதனம்
  • மறுபடியும் விடியும்
  • முகமற்ற ம‌னிதர்கள்
  • நெருப்பில் விழுந்த நிலவுப் பூ
  • பொழுது புலர்ந்தது: சிறுகதைத் தொகுதி
  • கி. வா. ஜ. முதல் வண்ணதாசன் வரை : 20 தமிழ்ப் படைப்பாளிகள்
  • அவர்கள் எங்கே போனார்கள் - சுதந்திரப்போராட்ட வரலாறு
  • வசந்த கால வைகறை (சிறுகதைத் தொகுப்பு)
  • விடிவை நோக்கி - சுதந்திரப்போராட்ட வரலாறு
  • ரத்தம் தோய்ந்த அந்த நாட்கள் - சுதந்திரப் போராட்ட வரலாறு
  • உள்ளங்கள் (நாவல்)
  • காந்தத் துாண்டிலில் சிக்கிய கனவு மீன் (நாவல்)
  • பட்டமரத்தில் வடிந்த பால் (சிறுகதைத் தொகுப்பு)
  • இந்த மண்ணின் உருவம் (சிறுகதைத் தொகுப்பு)
  • மயங்காத மனசுகள் (குறுநாவல்கள்)
  • இசைக்க மறந்த பாடல் (சிறுகதைத் தொகுப்பு)
  • பாலைவனத்தைக் கடக்கும் பசுக்கள் (நாவல்)
  • ஊமை இரவு (நாவல்)
  • சரித்திரம் உருவாக்கிய சந்திப்பு - தேசத்தலைவர்கள் பற்றிய நுால்
  • திவ்யதாரிணி (குறுநாவல்கள்)
  • அகம் பொதிந்தவர்கள் (எழுத்தாளர்கள் பற்றிய நுால்)
  • பொய் நின்ற ஞானம் (சிறுகதைத்தொகுப்பு)
  • இன்று இவர்கள் - அரசியல் தலவைர்கள் பற்றிய நுால்
  • நினைவின் திரைக்குள்ளே - கவிதைத் தொகுப்பு
  • வாழ்விக்கும் மனிதர்கள் (சான்றொர்கள் பற்றிய நுால்)
  • மௌனத்தின் நிழல் (சுதந்திரப் போராட்டம் பற்றிய நாவல்)
  • வாழ்ந்ததின் மிச்சம் (சிறுகதைத் தொகுப்பு)
  • நகரும் பொழுதுகள் (நாவல்)
  • வெளிச்சத்தின் பிம்பங்கள் - எழுத்தாளர்கள் பற்றிய நுால்)[2]

மறைவு

கர்ணன் 2020 சூலை 20 அன்று மதுரையில் காலமானார். இவரது மனைவி ரஞ்சிதம் 2012 இல் காலமானார். போலியோவால் பாதிக்கப்பட்டுக் கால் ஊனமான கர்ணன் மதுரை அருகே செல்லூரில் ஒரு வாடகை வீட்டில் வசித்துவந்தார்.[3] தமிழக அரசு இவருக்கு மாதம் மூவாயிரன் ரூபாய் உதவித்தொகை வழங்கி வந்தது. அவருடன் அவரது இரண்டு வாய்பேச முடியாத சகோதரிகள் வசித்தார்கள்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கர்ணன்_(எழுத்தாளர்)&oldid=3731" இருந்து மீள்விக்கப்பட்டது