கருவூர் நன்மார்பனார்
கருவூர் நன்மார்பனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான அகநானூற்றில் இவரது பாடல் ஒன்று உள்ளது. (பாலைத் திணை)யில் அமைந்த இப்பாடல் 277ஆம் வரிசையில் உள்ளது.
பாடல் தரும் செய்தி
முருக்கம் பூ பூத்திருக்கும் வேனில் காலம் வந்துவிட்டது. பொருள் தேடிச்சென்ற தலைவன் தன்னைத் தேடி இன்னும் வரவில்லையே என்று தலைவி தோழியிடம் அங்கலாய்க்கிறாள்.
உவமை நலன்கள்
- தலைவன் பிரிவால் தலைவியின் நெற்றி சாம்பிப் போயிற்று. பகல் போல ஒளி வீசிய நெற்றி மாலைக்காலம் போலச் சாம்பிவிட்டதாம்.
- முள்ளம்பன்றியின் முள்படிவு (பரூஉமயிர்) பனைமரத்தின் செறும்பு போல் இருக்குமாம்.
- மனை உறை சேவல் கோழியின் கழுத்து மயிர் தீ கொழுந்து விட்டு எரிவது போல இருக்குமாம்.