கருணா (ஓவியர்)

கருணா (இயூஜின் வின்சென்ட், இறப்பு: பெப்ரவரி 22, 2019) ஓர் ஈழத்து ஓவியர் ஆவார்.

இயூஜின் வின்சென்ற்
கருணா (ஓவியர்)
இயற்பெயர்/
அறியும் பெயர்
இயூஜின் வின்சென்ற்
பிறந்தஇடம் கரவெட்டி, யாழ்ப்பாணம்
இறப்பு (2019-02-22)பெப்ரவரி 22, 2019
பணி ஓவியர்
அறியப்படுவது ஓவியர்

வாழ்க்கைக் குறிப்பு

இயூஜின் வின்சென்ற் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டி மேற்கு, அரசடியை அண்மித்த பகுதியில் பிறந்தவர். புகழ் பெற்ற ஓவியர் மாற்குவின் மாணவர். புலம்பெயர்ந்து கனடா, டொராண்டோவில் வாழ்ந்து வந்த இவர் ஏராளமான தமிழ் நூல்களின் அட்டைப்படங்களை வரைந்துள்ளார். திண்ணை, உலகத் தமிழோசை உள்ளிட்ட பல இதழ்களில் இவரது ஓவியங்கள் வெளிவந்துள்ளன. பத்திரிகை வடிவமைப்பு, விளம்பர வடிவமைப்பு போன்றவற்றில் பெயர் பெற்ற இவர் சிறந்ததொரு ஒளிப்படக் கலைஞருமாவார்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கருணா_(ஓவியர்)&oldid=7067" இருந்து மீள்விக்கப்பட்டது