கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் கோயில்
சற்குணலிங்கேஸ்வரர் கோயில் சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 69ஆவது சிவத்தலமாகும். பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 132 வது தேவாரத்தலமாகும். இத்திருத்தலத்தில் எம தீர்த்தம் அமைந்துள்ளது.
தேவாரம் பாடல் பெற்ற திருக்கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்கருக்குடி |
பெயர்: | திருக்கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | மருதாந்த நல்லூர் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கருக்குடி நாதர், பிரமபுரீசுவரர், சற்குணலிங்கேசுவரர் |
தாயார்: | கல்யாண நாயகி, சர்வாலங்கார நாயகி, அத்வைத நாயகி |
தீர்த்தம்: | இமய தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
அமைவிடம்
கும்பகோணத்திருந்து எட்டு கி.மீ தொலைவிலுள்ளது.
அமைப்பு
வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடமும், நந்தியும் உள்ளன. மூலவர் சன்னதியின் முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக வலப்புறம் விநாயகர் சன்னதியும், இடது புறம் பாலமுருகன் சன்னதியும் உள்ளன. திருச்சுற்றில் கோயிலின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் அனுமந்தலிங்கம் சன்னதி உள்ளது. எதிரில் நந்தி மண்டபம் உள்ளது. திருச்சுற்றில் சக்தி விநாயகர், வலம்புரி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. அடுத்து ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் , கஜலட்சுமி, சற்குணபாண்டிய சமேதர், சூரியன், பாலசுப்பிரமணியர், நவக்கிரகம், பைரவர் ஆகியோர் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் விநாயகர், வீணாதார தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.
இறைவன், இறைவி
இத்தலத்தின் மூலவர் சற்குணலிங்கேஸ்வரர், இறைவி அத்வைதநாயகி.
சிறப்புகள்
இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர் என்பது சிறப்பம்சமாகும்[1] இத்தல சிவபெருமான் மணலால் பிடித்த சிறிய லிங்கமாக உள்ளார். ராமாயண காலத்தில் இராமர் மணலில் பிடித்த லிங்கம் என வழங்கப்படுகிறது. தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்குப் பரிகாரத் தலமாகக் கூறப்படுகிறது.[2] ஏனாதி நாத நாயனார் அவதரித்த தலமான எயினனூர் (ஏனநல்லூர்) எனும் தலம் இத்தலத்தின் அருகிலுள்ளது.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம்;177,178
- ↑ http://temple.dinamalar.com/New.php?id=352
வெளி இணைப்புகள்
அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்