கரி ஆனந்தசங்கரி

வார்ப்புரு:Infobox CanadianMP கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) என அழைக்கப்படும் சத்தியசங்கரி ஆனந்தசங்கரி கனடிய அரசியல்வாதியும், லிபரல் கட்சி உறுப்பினரும், மனித உரிமை வழக்கறிஞரும், கனடிய அமைச்சரும் ஆவார். இலங்கைத் தமிழரான இவர் 2015 அக்டோபர் 19 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.[1] 2023 சூலை 26 முதல் இவர் முடிக்குரியோர்-பூர்வகுடியினர் உறவுகளுக்கான அமைச்சராக உள்ளார்.[2]

கரி இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான வீ. ஆனந்தசங்கரியின் இரண்டாவது மகன் ஆவார். இலங்கையில் பிறந்த இவர் தனது 10வது அகவையில் 1983 இல் தனது தாயாருடன் கனடாவிற்குப் புலம்பெயர்ந்தார்.[3] ரொறன்ரோவில் உள்ள ஓஸ்குட் ஹால் சட்டப் பள்ளியில் சட்டம் பயின்று 2006 இல் பட்டம் பெற்றார். பின்னர் ரொறன்ரோவில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[3] கனடிய லிபரல் கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார். புதிதாக உருவாக்கப்பட்ட இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு அவரை எதிர்த்து போட்டியிட்ட பழைமைவாதக் கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து நாடாளுமன்றம் சென்றார்.

குடும்பம்

கரி ஆனந்தசங்கரி ஹரிணி சிவலிங்கம் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு பைரவி, சகானா என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.[4]

விருதுகள்

கரி ஆனந்தசங்கரி இரண்டாம் எலிசபெத் மகாராணியின் வைர விழா மற்றும் பொன் விழா விருதுகளைப் பெற்றிருக்கிறார்.[4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கரி_ஆனந்தசங்கரி&oldid=27238" இருந்து மீள்விக்கப்பட்டது