கரவை கந்தசாமி

கரவை ஏ. சி. கந்தசாமி (29 செப்டம்பர் 1938 - திசம்பர் 31, 1994) ஈழத்து இடதுசாரி அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, பேச்சாளர், கவிஞர் எனப் பன்முகம் கொண்டவர்.

கரவை கந்தசாமி
கரவை கந்தசாமி
இயற்பெயர்/
அறியும் பெயர்
கரவை ஏ. சி. கந்தசாமி
பிறப்புபெயர் ஆறுமுகம் செல்லையா கந்தசாமி
பிறந்ததிகதி (1938-09-29)29 செப்டம்பர் 1938
பிறந்தஇடம் கரவெட்டி, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
இறப்பு திசம்பர் 31, 1994(1994-12-31) (அகவை 56)
பணி அரசியல்வாதி
தொழிற்சங்கவாதி
தேசியம் இலங்கைத் தமிழர்
கல்வி கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி தமிழ் நாடு இந்தியா
அறியப்படுவது தொழிற்சங்கவாதி
அரசியல்வாதி
துணைவர் வசந்தாதேவி (பி: மே 26, 1946 - மார்ச் 17, 2019.)
பிள்ளைகள் மீராபாரதி (பாரதிமோகன்)
ஈழபாரதி
ஜெயபாரதி

அரசியலில்

இடதுசாரி இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கரவை கந்தசாமி 61ம் ஆண்டிலிருந்து 63ம் ஆண்டு வரை கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசாபிமானி பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலிருந்துள்ளார். 1960களில் இலங்கைப் பொதுவுடைமைக் கட்சி இரண்டாகப் பிரிந்தபோது நா. சண்முகதாசனுடன் பீக்கிங் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். சண்முகதாசன் அவர்கள் தமது கட்சிக்காக முதன் முதலாக வெளியிட்ட 'தொழிலாளி' பத்திரிகையை கந்தசாமி பதிப்பித்து வெளியிட்டார். மலையகத்தில் செங்கொடி தொழிற்சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். 1971 இல் இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியினர் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட போது, என். சண்முகதாசனுடன் இவரும் கைது செய்யப்பட்டு, ஓராண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார்.[1]

ஈழத் தமிழ்ப் போராளிக் குழுவான புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான சனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் துணைத் தலைவராக 1994 பொதுத்தேர்தலில் புளொட் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டார்.

படுகொலை

கரவைக் கந்தசாமி 1994 டிசம்பர் 31 அன்று இரவு கொழும்பு, தெகிவளையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்

  1. "பல்கலைக்கழக கல்வியை பெற முடியாதது கவலை". தினகரன் வாரமஞ்சரி இம் மூலத்தில் இருந்து 31 திசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161231025940/http://archives.thinakaran.lk/Vaaramanjari/2013/02/17/?fn=f1302171. பார்த்த நாள்: 31 திசம்பர் 2016. 

வெளி இணைப்புகள்

கரவை ஏ. சி. கந்தசாமி

"https://tamilar.wiki/index.php?title=கரவை_கந்தசாமி&oldid=24133" இருந்து மீள்விக்கப்பட்டது