கம்பன் நேற்று – இன்று - நாளை (நூல்)

கம்பன் நேற்று – இன்று – நாளை என்னும் நூல் சுகி. சிவம் என்பவர் சென்னை கம்பன் கழகத்தில் அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவுத் தொடரின் பதினெட்டாவது சொற்பொழிவாக 2001 சூலை 28 ஆம் நாள் நிகழ்த்திய சொற்பொழிவின் எழுத்து வடிவம் ஆகும். இச்சொற்பொழிவு சென்னை கம்பன் கழகத்தின் தலைவராகவும் நீதியரசராகவும் பணியாற்றிய டாக்டர் மு. மு. இஸ்மாயில் தலைமையில் சென்னை ஏவி. எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நிகழ்த்தப்பட்டது.[1]

கம்பன் நேற்று – இன்று - நாளை
நூல் பெயர்:கம்பன் நேற்று – இன்று - நாளை
ஆசிரியர்(கள்):சுகி. சிவம்
வகை:சொற்பொழிவு
துறை:தமிழ் இலக்கியம்
கம்பராமாயணம்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:160
பதிப்பகர்:வானதி பதிப்பகம்,
13 தீனதயாளு தெரு
தியாகராயர் நகர்,
சென்னை 600 017
பதிப்பு:மு.பதிப்பு ஆகத்து 2001
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

உள்ளடக்கம்

கம்பன் நேற்று – இன்று – நாளை என்னும் பொதுத்தலைப்பின் கீழ் பதினொறு துணைத் தலைப்புகளில் இச்சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. அவ்வாறு இந்நூலிலும் பதினொறு கட்டுரைகள் இடம்பெற்று உள்ளன. ஒவ்வொரு துணைத் தலைப்பிலும் அத்தலைப்பின் நுவல்பொருள் கம்பன் கழகங்களில் கடந்த காலத்தில் எந்நிலையில் இருந்தது; தற்காலத்தில் எந்நிலையில் இருக்கிறது; எதிர்காலத்தில் எந்நிலையில் இருக்க வேண்டும் எனச் சுட்டுபவைகளாக இப்பொழிவுகள் அமைந்திருக்கின்றன.[2] அத்துணைத் தலைப்புகள் பின்வருமாறு:

01 கம்பன் நேற்று – இன்று – நாளை
02 கம்பராமாயணக் காவல் நிலையங்கள் நேற்று – இன்று – நாளை
03 கம்பன் விழாக்கள் நேற்று – இன்று – நாளை
04 கம்பராமாயணக் கதை நேற்று – இன்று – நாளை
05 கம்பன் கருத்துக்கள் நேற்று – இன்று – நாளை
06 கம்பனது சமயம் நேற்று – இன்று – நாளை
07 கம்பன் கவியனுபவம் நேற்று – இன்று – நாளை
08 கம்பன் தனிச்சிறப்பு நேற்று – இன்று – நாளை
09 கம்பனது சமய இலக்கியம் நேற்று – இன்று – நாளை
10 கம்பன் காட்டும் அரசியல் நேற்று – இன்று – நாளை
11 என்றும் உண்டு எதிர்காலம்

சான்றடைவு

  1. சுகி. சிவம், கம்பன் நேற்று – இன்று – நாளை, வானதி பதிப்பகம் – சென்னை, ஐந்தாம் பதிப்பு நவம்பர் 2006, பக்.6
  2. சுகி. சிவம், கம்பன் நேற்று – இன்று – நாளை, வானதி பதிப்பகம் – சென்னை, ஐந்தாம் பதிப்பு நவம்பர் 2006, பக்.8