கபிலர் விருது

கபிலர் விருது (Kabilar Award) என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2012 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. பழந்தமிழர் தொன்மை, வரலாறு, நாகரீகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும்; தமிழுக்கு உயிரூட்டும் வண்ணம் படைப்புகளைப் புனைந்து வழங்கும் கவிஞர் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்று அளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்

வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 பேராசிரியர் முனைவர் அ. அ. மணவாளன் 2012
2 கவிஞர் முத்துலிங்கம் 2013
3 ச. கிருட்டிணமூர்த்தி[1] 2017
4 புலவர் வெற்றி அழகன்[2] 2019
5 செ.ஏழுமலை[3] 2020

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கபிலர்_விருது&oldid=19268" இருந்து மீள்விக்கப்பட்டது