கபந்தன்


கபந்தன் அல்லது கவந்தன் (Kabandha) (कबन्ध, இராமாயணக் காவியத்தில் ஆரண்யகாண்டத்தில் கூறப்படும், கால்கள், கழுத்து, தலையும் அற்ற முண்டமும், நீண்ட கைகளும், வயிற்றில் ஒற்றைக் கண்ணும், அகண்ட வாயுடன் கூடிய ஒரு இராட்சசன் ஆவார். கபந்தனின் இரண்டு நீண்ட கைகளை இராமன் மற்றும் இலக்குமணன் வெட்டி வீழ்த்தியதால், கபந்தன் முக்தி அடைந்தான்.

தலையும், கழுத்தும், கால்கள் அற்ற, பெரிய வயிற்றில் ஒற்றைக் கண்ணும், அகண்ட வாயும், நீண்ட கைகளுடன் கூடிய கபந்தனின் கைகளை வெட்டும் இராம-இலக்குவணர்கள்
இராம-இலக்குமணர்கள் கபந்தனின் நீண்ட கைகளை வெட்டும் காட்சி, 16வது நூற்றாண்டு ஓவியம், அயோத்தியாபட்டினம் இராமர் கோயில் கூரை ஓவியம், சேலம், தமிழ்நாடு

வரலாறு

கபந்தன் முற்பிறவியில் தனு என்ற பெயரைக் கொண்ட தேவலோக கந்தர்வ இன இசைப் பாடகர் ஆவார். இந்திரனின் சாபத்தால், அறுவறுப்பான தோற்றமும், தலையும், கழுத்தும் அற்ற, கால்கள் மற்றும் தலையற்ற உடலுடன் கூடிய அரக்கனாக தண்டகாரண்யத்தில் ஓரிடத்திலே தங்கி வாழ்ந்து மனிதர்களையும், விலங்குகளையும் கொன்று புசித்து வாழ்ந்தான்.

வனவாசத்தின் போது தண்டகாரண்யத்தில் இராம – இலக்குவணர்கள் வாழ்ந்த போது, கபந்தன் இருவரையும் தாக்கி கொல்ல முயற்சித்த போது, இராம-இலக்குவணர்கள் கபந்தனின் கைகளை வெட்டிக் கொன்றனர். பின்னர் கபந்தன் கந்தர்வனாக வடிவெடுத்து, சுக்கிரீவன் தங்கியுள்ள ரிசியமுக மலைக்கு சென்று அவனின் நட்பினை பெற்று, இராவணன் கவர்ந்து சென்ற சீதையை கண்டுபிடிக்குமாறு இராம-இலக்குமணர்களுக்கு ஆலோசனை கூறினான். [1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/index.php?title=கபந்தன்&oldid=38430" இருந்து மீள்விக்கப்பட்டது