கனகசுந்தரசுவாமி வீரவாகு
கனகசுந்தரசுவாமி வீரவாகு (Kanagasundaraswami Veerabahu, 30 சூன் 1948 - 17 பெப்ரவரி 2015) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மாகாணசபை உறுப்பினரும் ஆவார்.
கனகசுந்தரசுவாமி வீரவாகு மா.ச.உ. | |
---|---|
வட மாகாண சபை, முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் | |
பதவியில் 11 அக்டோபர் 2013 – 17 பெப்ரவரி 2015 | |
முன்னவர் | எவருமில்லை |
பின்வந்தவர் | கந்தையா சிவனேசன் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 10ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மாவட்டம் | 30 சூன் 1948
இறப்பு | 17 பெப்ரவரி 2015 யாழ்ப்பாணம், இலங்கை | (அகவை 66)
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் சார்புகள் |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
வாழ்க்கை துணைவர்(கள்) | சண்முகப்பிரியா |
பெற்றோர் | வீரவாகு, கற்பகம் |
பணி | கிராம அலுவலர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
புதுக்குடியிருப்பு கிராம அலுவலராகப் பணியாற்றிய கனகசுந்தரசுவாமி வீரவாகு 2013 மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு 8,702 வாக்குகள் பெற்று வட மாகாண சபைக்குத் தெரிவானார்.[1][2] இவர் வடமாகாண சபை உறுப்பினராக வீரசிங்கம் மண்டபத்தில் முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் 2013 அக்டோபர் 11 அன்று பதவியேற்றார்.[3][4] இதன் பின்னர் அமைக்கப்பட்ட வட மாகாண சபையில் இவர் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, விவசாயம், கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசன மற்றும் சுற்றாடல் அமைச்சில் உதவி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[5]
மறைவு
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கனகசுந்தரசுவாமி வவுனியாயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.[6] பின்னர் இவர் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு 2015 பெப்ரவரி 17 இல் காலமானார்.[6][7][8]
மேற்கோள்கள்
- ↑ "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி 1829/33. 25 September 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 1 மே 2015.
- ↑ "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 ñ Results and preferential votes: Northern Province". டெய்லிமிரர். 26 செப்டம்பர் 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html.
- ↑ "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11 அக். 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736.
- ↑ "Northern Provincial Council TNA members take oaths". சண்டே டைம்சு. 11 அக். 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html.
- ↑ "Division of Ministries of the Northern Provincial Council & Subjects for Councillors". தமிழ்நெட். 11 October 2013. http://www.tamilnet.com/img/publish/2013/10/Division_of_Ministries.pdf.
- ↑ 6.0 6.1 "TNA Mullaitivu NPC member V. Kanagasunthara Swami passed away". Tamil CNN. 18 பெப்ரவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-02-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150222163308/http://www.tamilcnn.ca/tna-mullaitivu-npc-member-v-kanagasunthara-swami-passed-away.html.
- ↑ "Funeral of NPC member Veerabahu Kanakasuntharaswami: Thousands of people participated". Tamil CNN. 20 February 2015 இம் மூலத்தில் இருந்து 9 மே 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150509221720/http://www.tamilcnn.ca/funeral-of-npc-member-veerabahu-kanakasuntharaswami-thousands-of-people-participated.html.
- ↑ Rubatheesan, S. (22 பெப். 2015). "Been there, done that, say apathetic Mullaitivu voters". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/150222/news/been-there-done-that-say-apathetic-mullaitivu-voters-137083.html.