கந்திலி ஊராட்சி ஒன்றியம்
கந்திலி ஊராட்சி ஒன்றியம் ,இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியம் முப்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கந்திலியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கந்திலி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,45,692 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 25,729 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,641 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
கண்டிலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அதியூர்
- அவல்நாய்க்கன்பட்டி
- சின்னகந்திலி
- சின்னகாசி என்.பட்டி
- சின்னராம்பட்டி
- கிழக்கு பாடணவாடி
- எலவம்பட்டி
- எர்ராம்பட்டி
- காஜல்நாய்க்கன்பட்டி
- கும்மிடிகாம்பட்டி
- கக்கன்காரி
- கந்திலி
- கொரட்டி
- குனிச்சி
- குரும்பேரி
- லக்கிநாய்க்கன்பட்டி
- மானவல்லி
- மண்டலநாயனகுண்டா
- மாட்றபள்ளி
- மோட்டூர்
- நரியனேரி
- நரசம்பட்டி
- நத்தம்
- உதயமுத்தூர்
- பல்லாத்தூர்
- பரதேசிபட்டி
- பரமுத்தம்பட்டி
- பேரம்பாட்டு
- பெரியகண்ணாளப்பட்டி
- பெரியகாரம்
- பள்ளிப்பட்டு
- சேவாத்தூர்
- சிம்மானபுதூர்
- சுந்தராம்பள்ளி
- தொக்கியம்
- தோரணம்பட்டி
- வெங்காலபுரம்
- விஷாமங்கலம்