கந்தர்வன்

கந்தர்வன் (பெப்ரவரி 3, 1944 - ஏப்ரல் 22, 2004) தமிழக எழுத்தாளரும், கவிஞரும், தொழிற்சங்கவாதியும் ஆவார்.

கந்தர்வன்
கந்தர்வன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கந்தர்வன்
பிறப்புபெயர் ஜி.நாகலிங்கம்[1]
பிறந்ததிகதி (1944-02-03)பெப்ரவரி 3, 1944
பிறந்தஇடம் சிக்கல் (இராமநாதபுரம்)
இறப்பு ஏப்ரல் 22, 2004(2004-04-22) (அகவை 60)
தேசியம் இந்தியா
அறியப்படுவது எழுத்தாளர்

வாழ்க்கைக் குறிப்பு

கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் என்னும் ஊரைச் சார்ந்தவர். கணேசன், கனகம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். 29 வயதில் அரசுப்பணிக்கு வந்த கந்தர்வன் தொழிற்சங்கவாதியாகத் தீவிரமாக இயங்கியவர். அவசரநிலை காலத்தில் 19 மாதங்கள் வேலையிழந்து பின்னர் மீண்டும் பணியேற்றவர்.

இலக்கிய வாழ்வு

70-களின் தொடக்கத்தில் உருவான மக்கள் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். பின்னர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவராகித் தம் இறுதிக்காலம் வரை பங்களிப்புச் செய்தவர். எழுத்தாளர் ஜெயகாந்தனால் "இலக்கியச் சிந்தனை' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட இவரது "மைதானத்து மரங்கள்' கதை, 12-ஆம் வகுப்பு தமிழ்த் துணைப்பாட நூலில் பாடமாக இடம்பெற்றது. பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற இவருடைய படைப்புகள் குறித்துப் பலரும் ஆய்வு நிகழ்த்தி வருகின்றனர். ஆண்டுதோறும் இவரது நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.

படைப்புகள்

கவிதை நூல்கள்

  • கிழிசல்கள்,
  • மீசைகள்,
  • சிறைகள்,
  • கந்தர்வன் கவிதைகள்

சிறுகதைத் தொகுப்பு நூல்கள்

  • சாசனம்,
  • பூவுக்குக் கீழே,
  • கொம்பன்,
  • ஒவ்வொரு கல்லாய்,
  • அப்பாவும் மகனும்
  • தண்ணீர்

நாட்டுடமை

கந்தர்வனின் நூல்களை நாட்டுடமை ஆக்குவதாக தமிழ்நாடு அரசு 2022 திசம்பரில் அறிவித்தது. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ 10 இலட்சம் இவரது வாரீசுகளுக்கு வழங்குவதாக தெரிவித்தது.

மேற்கோள்கள்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=கந்தர்வன்&oldid=6710" இருந்து மீள்விக்கப்பட்டது