கதை (திரைப்படம்)
கதை 2010 ஆம் ஆண்டு அபிஷேக் இயக்கத்தில், ராஜன் ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், புதுமுக நடிகர்கள் ஷான் குமார் மற்றும் நிவேதிதா நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3][4]
கதை | |
---|---|
இயக்கம் | அபிஷேக் |
தயாரிப்பு | ராஜன் ராதாகிருஷ்ணன் |
இசை | பவுல் ஜேக்கப் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | அபுஷா |
படத்தொகுப்பு | ஆர். ஆர். ஈஸ்வர் |
கலையகம் | ஆகாஷ் அக்சய் ராஜ் சினி இன்டர்நேஷனல் |
விநியோகம் | எம். சசிகுமார் (மதுரை) |
வெளியீடு | சனவரி 29, 2010 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
எழுத்தாளர் நரேன் (ஷான்) எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான புக்கர் பரிசினை வெல்கிறார். இந்த விருதை தன் மனைவி காவ்யாவிற்கு (நிவேதிதா) சமர்ப்பிக்கிறார். அத்தம்பதிகளின் கடந்த காலக் கதை சொல்லப்படுகிறது.
நரேன் முதன்முதலில் காவ்யாவை இசையரங்கத்தில் வயலின் இசைக்கருவியை வாசிக்கும் போது காண்கிறான். அவளின் திறமையைப் பாராட்டி தன் வயலின் இசைக்கருவியில் அவளது கையொப்பத்தைக் கேட்டுப் பெறுகிறான். இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர். நரேனின் வீட்டுக்கு வரும் காவ்யா அவன் எழுதிய புத்தகங்களுக்காக பெற்ற பரிசுகளைக் கண்டு அவன் ஒரு எழுத்தாளர் என்றறிகிறாள். அப்போது அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறும் நரேனிடம் தன் சம்மதத்தைத் தெரிவிக்கிறாள்.
தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இருவரும் காவ்யாவின் பால்ய நண்பனான புஜ்ஜியை (அபிநய்) சந்திக்கின்றனர். நரேன் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்தைப் படிக்கும் காவ்யாவிற்கு, அப்புத்தகத்தின் கதை தங்கள் இருவரின் வாழ்க்கை பற்றியது என்று புரிகிறது. இதனால் அதிர்ச்சியடையும் அவள் நரேனிடம் அதுகுறித்து கேட்க, அவனோ இது நம் வாழ்க்கை என்பது மற்றவர்களுக்குத் தெரியாது என்றும், மற்றவர்களைப் பொறுத்தவரை இதுவும் ஒரு கதை என்றும் கூறுகிறான். அப்புத்தகத்தைத் தொடர்ந்து எழுதும் நரேன் அக்கதையில் வரும் கணவன் மனைவியைக் கொடுமைப்படுத்துவதாக எழுதுகிறான். கதையின் எதார்த்தத்திற்காக அவன் உண்மையாகவே காவ்யாவைக் கொடுமை செய்கிறான். காவ்யாவும் கதைக்காக செய்வதாக எண்ணி அவனுக்கு ஒத்துழைப்பு தருகிறாள். அவர்கள் வீட்டிற்கு வரும் புஜ்ஜி, நரேன் கதை என்ற பெயரில் காவ்யாவை செய்யும் கொடுமையைக் காண்கிறான். நரேனின் உண்மையான குணத்தை அறியும் புஜ்ஜியைக் கொல்கிறான் நரேன். நரேனிடமிருந்து காவ்யா தப்பித்தாளா? என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
- ஷான் குமார் - நரேன்
- நிவேதிதா - காவ்யா
- அபிநய் - ஆனந்த்
- தீபா வெங்கட்
- நளினி
- கஞ்சா கருப்பு
- கிரேசி குமார்
- பாலமுரளி கிருஷ்ணா
- மால்குடி சுபா
- சின்னப்பொண்ணு
இசை
படத்தின் இசையமைப்பாளர் பவுல் ஜேக்கப்.
வ.எண் | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | பூங்க் டூங்க | பிளாஸி, மால்குடி சுபா, சங்கர் மகாதேவன் |
2 | தீராத விளையாட்டு பிள்ளை | பாலமுரளி கிருஷ்ணா, சின்னப்பொண்ணு |
3 | தி சர்ச் | பத்மா சங்கர் |
4 | இதுதான் வாழ்க்கையா | வசுந்தரா தாஸ் |
5 | நீதானே | சங்கர் மகாதேவன், மகாலட்சுமி ஐயர் |
மேற்கோள்கள்
- ↑ "அபிஷேக் இயக்குனர்". http://sify.com/movies/fullstory.php?id=14813026.
- ↑ "கதை" இம் மூலத்தில் இருந்து 2013-02-04 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130204042435/http://beta.thehindu.com/arts/movies/article100678.ece.
- ↑ "கதை" இம் மூலத்தில் இருந்து 2009-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090316181745/http://www.hindu.com/2009/03/12/stories/2009031258480200.htm.
- ↑ "கதை" இம் மூலத்தில் இருந்து 2010-02-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100204074308/http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies/tamil-cinema-topten-movie-kadhai.html.