கதக் கண்ணனார்
கதக் கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாக இரண்டு உள்ளன. அவை குறுந்தொகை 88, 94.
பாடல் தரும் செய்திகள்
குறுந்தொகை 88
தலைவன் தன் நாட்டு யானை புலியைத் தாக்கிவிட்டு நள்ளிரவில் வருவது போல வந்திருக்கிறான். நாம் நமக்கு நேரும் வடுக் காயங்களைப் பார்க்கக் கூடாது என்று சொல்லித் தோழி தலைவியைத் தலைவனிடம் அனுப்பிவைக்கிறாள்.
குறுந்தொகை 94
பிரிவில் தலைவி கலங்குவாள் என்று எண்ணி நெஞ்சழிகிறாள் தோழி. அதனைப் போக்கும் வகையில் தலைவி இதனைச் சொல்கிறாள். மாரிக் காலத்தில் பூக்கும் பித்திகைப் பூ அரும்பும். அவர் பொருள் தேடச் சென்ற நாட்டிலும் அரும்பும் அல்லவா? எனவே இவர் பொருள் தேடச் சென்றாலும் காலத்தில் திரும்புவார் என்று தான் நம்புவதாகத் தலைவி தோழிக்குச் சொல்கிறாள்.
செடியினம்
- பித்திகை = மழை பெய்யத் தொடங்கிய மறுநாள் குபீரெனப் பூக்கும் ஒருவகைச் செடிப்பூ. இது பிடவம் பூவின் மற்றொரு வகை.