கண் (இடப்பெயர்)
கண் என்னும் சொல் பின்னொட்டாக வருவதோடு மட்டுமன்றி, முதலில் நின்று இடம் ஒன்றை உணர்த்தும் சொல்லாகவும் வரும்.
- கண் நின்று கண் அறச் சொல்லினும் சொல்லற்க
- முன நின்று பின் நோக்காச் சொல்.[1]
இந்தத் திருக்குறள் கண் என்னும் சொல்லை இரண்டு வகையான ஆகுபெயர் பொருளில் கையாளுகிறது. கண்ணுக்கு எதிரே நின்றுகொண்டு இரக்கம் இல்லாமல் சொன்னாலும் சொல்லுக. ஆனால் கண்ணோட்டம் இல்லாமல் ஒருவனின் கண் எதிரே இல்லாத இடத்தில் அவனைப் பற்றிப் புறஞ்சொல் பேசக்கூடாது. இவ்வாறு கூறும்போது முதலில் நிற்பது கண்ணுக்குள் தெரியும் இடத்தை உணர்த்தும் ஆகுபெயர். இரண்டாவது கண் பார்வையால் உண்டாகும் இரக்கக் குணத்தை உணர்த்தும் ஆகுபெயர்.
அடிக்குறிப்பு
- ↑ திருக்குறள் 184