கடைசி விவசாயி

கடைசி விவசாயி (Kadaisi Vivasayi) 2022 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை எம். மணிகண்டன் எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியிருந்தார். திரைப்படத்தில் எண்பத்தைந்து வயது விவசாயி நல்லாண்டியுடன், விஜய் சேதுபதி, யோகி பாபு, முனீஸ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர்.[1]  ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரித்த[1] இத்திரைப்படம்  2022 பெப்ரவரி 11 அன்று வெளியிடப்பட்டது.[2]

கடைசி விவசாயி
சுரொட்டி
இயக்கம்எம். மணிகண்டன்
தயாரிப்புஎம். மணிகண்டன்
கதைஎம். மணிகண்டன்
இசைசந்தோஷ் நாராயணன் ரிச்சர்டு ஹார்வே
நடிப்புநல்லாண்டி
விஜய் சேதுபதி
யோகி பாபு
முனீஸ்வரன்
ரைச்சல் ரபேக்க பிலிப்
ஒளிப்பதிவுஎம். மணிகண்டன்
படத்தொகுப்புபி. அஜித்குமார்
கலையகம்டிரைபல் ஆர்ட்ஸ் புரொடக்சன்ஸ்
விநியோகம்விஜய் சேதுபதி தயாரிப்பு
7சி எண்டர்டெயின்மெண்ட்
வெளியீடு11 பெப்ரவரி 2022 (2022-02-11)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

கரிசல் நிலத்தில் ஒரு சிற்றூர். அந்த ஊரிலிருந்த வேளாண் நிலத்தை விற்றுவிட்டு வெளியேறிய மக்கள் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு குலதெய்வத்தை வழிபட வருகின்றனர். குலதெய்வ வழிபாட்டில் இருக்கும் நம்பிக்கைகளை கடைபிடித்தே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது. வழிபாட்டுக்காக ஒரு மரக்கால் புது நெல் தேவைப்படுகிறது. ஆனால் நிலத்தை அனைவரும் வீட்டு மனை விற்பனையாளர்களிடம் விற்றுவிட்ட நிலையில், ஒரே ஒரு கடைசி மூத்த விவசாயி மட்டும் ஒரு துண்டு நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அவரிடம் ஒரு மரக்கால் புதுநெல்லுக்காக ஊர் மக்கள் வேண்டி நிற்கின்றனர். அதை விளைவிக்க அந்த விவசாயி படும் பாடே கதையாகும்.

நடிகர்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கடைசி_விவசாயி&oldid=31708" இருந்து மீள்விக்கப்பட்டது