கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோயில்

கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், கடத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் கோவில்
படிமம்:Arjuneswarar Koil Kadathur East.jpg
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:கடத்தூர், மடத்துக்குளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மடத்துக்குளம்
மக்களவைத் தொகுதி:பொள்ளாச்சி
கோயில் தகவல்
மூலவர்:அர்ச்சுனேஸ்வரர்
தாயார்:கோமதி அம்மமாள்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் அர்ச்சுனேஸ்வரர், கோமதி அம்மமாள் சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், காலபைரவர், சனீஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஏழு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி, சித்திரை, ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.