கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
கச்சிப் பேட்டுப் பெருந்தச்சனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாக 144, 213 எண்களில் நற்றிணைப் பாடல்கள் இரண்டு உள்ளன.
கச்சிப்பேட்டு இளந்தச்சனார் என்னும் புலவர் இவரது தம்பி.
நற்றிணை 144 தரும் செய்தி
இது குறிஞ்சித்திணைப் பாடல்.
புலி தாக்குதலிலிருந்து தப்ப ஆண்யானை போராடிக்கொண்டிருக்கும். பெரிய மலைப்பாம்பிடமிருந்து தப்பப் பெண்யானை போராடிக்கொண்டிருக்கும். (இப்படிப்பட்ட கொடிய வழி வேண்டாம். திருமணம் செய்துகொள்) - என்கிறாள் தலைவி
நற்றிணை 213 தரும் செய்தி
இது குறிஞ்சித்திணைப் பாடல்.
பழந்தமிழ்
- ஆம் அறல் = நீரின் சிற்றலை
வேரில் பழுத்திருக்கும் பலாப்பழத்தை கன்று போட்ட செவலைப் பசு மேயும். பக்கத்து மூங்கில் காட்டில் ஓடை நீரைப் பருகும். அங்கே எம் சிறுகுடி உள்ளது. அங்கிருந்து நான் தினைபுனம் காக்கச் செல்லலாமா என எண்ணுகிறேன். அது நல்லதா? - தலைவன் கேட்கும்படி தலைவி இப்படிச் சொல்கிறாள்.
அவன் அங்கு வரலாம் என்று இடம் சுட்டுகிறாள்.