கசூரினா கடற்கரை

கசூரினா கடற்கரை, இலங்கை நாட்டின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் எனும் இடத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் யாழ் மாவட்டத்தில் காரைநகா் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் காரைநகா் ஊரில் அமைந்துள்ள கடற்கரை ஆகும்.

2021 இல் கசூரினா கடற்கரையின் தோற்றம்

தினமும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளையும் தென்னிலங்கை மக்களையும் கவா்ந்து மக்கள் வந்துபோகும் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்கும் கசூரினா கடற்கரை பிரபலமானதற்கு காரணங்கள் இங்கு அளவான அலையுடன் சரிவு குறைவான கடல் மண்ணும் அமைந்திருப்பதால் கடலில் குளிப்பவா்களுக்கு இது இதமான அனுபவமாக அமைந்துள்ளது.[1]

கடற்கரை மணற்பரப்பில் அழகிய வடிவங்களில் சிப்பி, சங்கு, கடற்கல் போன்றவை கிடைக்கும் என்பதால் இங்கு வரும் உல்லாசப் பிரயாணிகள் நினைவாக இவற்றை சேகரித்து செல்லுவா்.

2004 சுனாமியின் போது இந்த கடற்கரை பிரதேசம் முற்றாக நீரால் நிரம்பியது என்றபோதும் யாருக்கும் சேதங்கள் இல்லை. அதே நாள் இந்த கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ள ஈழத்துச் சிதம்பரம் எனப்படும் காரைநகா் சிவன்கோவில் தோ் திருவிழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றிருந்தனா்.

இந்த கடற்கரைபில் நின்று பாா்க்கும் போது ஆங்கிலேயரால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கடற்போக்குவரத்து அடையாளமாக கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் எனப்படும் வெளிச்ச வீடு தென்படும்.

கசூரினா என்பதற்கு சவுக்கு மரம் என்ற அா்த்தம் இருப்பதாகவும் சவுக்கு மரங்கள் நிறைந்து காணப்படும் பகுதியாக இந்த கடற்கரை காணப்படுவதால் இந்த பெயா் ஏற்பட காரணமாக இருந்தது எனவும் செவிவழி தகவல்கள் உண்டு.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்துறை வருவாய்க்கு கசூரினா கடற்கரை மிகமுக்கியமான பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கசூரினா_கடற்கரை&oldid=11629" இருந்து மீள்விக்கப்பட்டது