ஓ. ஏ. கே. சுந்தர்
ஓ. ஏ. கே. சுந்தர் (O. A. K. Sundar) என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றுகிறார். விருமாண்டியில் இவர் நடித்த பகைகொண்ட பாத்திரத்துக்காக அறியப்படுகிறார். மேலும் இவர் தொலைக்காட்சி தொடரான ரோமாபுரி பாண்டியன் மற்றும் மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரமான பீஷ்மர் பாத்திரத்தை ஏற்று நடித்தார். இவரது தந்தை தமிழ் நடிகரான ஓ. ஏ. கே. தேவர் ஆவார். அவர் பல படங்களில் எதிர்மறை பாத்திரங்களில் நடித்தார்.
ஓ. ஏ. கே. சுந்தர் | |
---|---|
பிறப்பு | சுந்தரேசன் 3 சனவரி 1970 இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, மதுரை |
பணி | நடிகர் |
உயரம் | 6 அடி |
பெற்றோர் | ஓ. ஏ. கே. தேவர் |
வாழ்க்கைத் துணை | லோகநாயகி (2006 - தற்போது வரை) |
பிள்ளைகள் | எஸ். ஆதிசங்கர் |
தொழில்
ஓ. ஏ. கே. சுந்தர் நாடோடிப் பாட்டுக்காரன் (1992) படத்தின் வழியாக திரைப்படங்களில் அறிமுகமானார்.[1] விருமாண்டி (2004), நான் அவனில்லை (2007) உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.[2] ஐயர் ஐ. பி. எஸ்சில் இவரது நடிப்பு குறித்து, ஒரு விமர்சகர் "ஆனந்தராஜ் மற்றும் ஓ. ஏ. கே. சுந்தர் (தாதாவின் மகன்கள்) போதுமானவர்கள்" என்று குறிப்பிட்டார். மகாபாரதம் என்ற தொலைக்காட்சி தொடரில் பீஷ்மரில் பாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார். பல தொலைக்காட்சித் தொடர்களில் பணிபுரிந்த பிறகு, திரைப்படங்களில் கவனம் செலுத்துவதற்காக அவற்றில் பணிபுரிவதை நிறுத்தினார்.[3] அதன்பிறகு கிடாரி (2016),[4][5] சாமி 2 (2018),[6] ராக்கி: தி ரிவெஞ்ச் (2019) உள்ளிட்ட பல படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.[7]
தனிப்பட்ட வாழ்க்கை
பல படங்களில் எதிர்மறை பாத்திரங்களில் நடித்த ஓ. ஏ. கே. தேவரின் மகன் இவர்.[2][8][9] 1998 ஆம் ஆண்டில், இவர் எஸ் லோகநாயகியை மணந்தார்.[10] ரிஷிகேஷில் வாடா (2010) படப்பிடிப்பில் இருந்தபோது, இவர் ஒசாமா பின்லேடன் போன்ற வேடத்தில் தோற்றமளித்ததால் இந்திய ராணுவத்தால் பிடிக்கபட்டார்..[11]
தொலைக்காட்சி
ஆண்டு | நிகழ்ச்சி | பங்கு | அலைவரிசை | குறிப்புகள் |
---|---|---|---|---|
2001 | மர்மதேசம் - சோர்ண ரேகை | கடத்தல்காரன் | ராஜ் தொலைக்காட்சி | |
2002 - 03 | அகல் விளக்குகள் | சன் தொலைக்காட்சி | ||
2006-08 | அஞ்சலி | ஜீவா | சக்தி தொலைக்காட்சி | |
2007-08 | காதலிக்க நேரமில்லை | முருகவேல் | விஜய் தொலைக்காட்சி | |
2012-17 | பைரவி ஆவிகளுக்குப் பிரியமானவள் | மாய அசுரா | சன் தொலைக்காட்சி | |
2012-14 | பிள்ளை நிலா | தங்கதுரை | சன் தொலைக்காட்சி | |
2012-14 | மேற்கு மாம்பலதில் ஓரு காதல் | ஜீ தமிழ் | ||
2013-16 | மகாபாரதம் | பீஷ்மா | சன் தொலைக்காட்சி | |
2014 | பொம்மலாட்டம் | முருகேசன் | சன் தொலைக்காட்சி | சிறப்புத் தோற்றம் |
2014-16 | ரோமாபுரி பாண்டியன் | கரிகலன் | கலைஞர் தொலைக்காட்சி | முக்கிய கதாபாத்திரம் |
2021-தற்போது | வேலம்மாள் | விஜய் தொலைக்காட்சி |
திரைப்படவியல்
- குறிப்பில் எதுவும் குறிப்பிடப்படாதைவை அனைத்தும், தமிழ் படங்களாகும்.
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1992 | நாடோடிப் பாட்டுக்காரன் | சின்னபாண்டி | |
1993 | செந்தூரப் பாண்டி | மீனாவின் பட்டய கணக்காளர் | |
1994 | பொண்டாட்டியே தெய்வம் | ||
1995 | தேவா | கிராமத்து மனிதர் | |
1995 | ரகசிய போலீஸ் | ||
1999 | முதல் எச்சரிக்கை | ||
2000 | காதல் ரோஜாவே | அடியாள் | |
2004 | நிரப்பாகிட்டு | மலையாள படம் | |
2004 | விருமாண்டி | கோட்டைசாமி | |
2004 | ஜோர் | காவல் ஆய்வாளர் | |
2004 | காதலே ஜெயம் | ||
2004 | எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி | குமரனின் பயிற்சியாளர் | |
2005 | ஐயா | ச.ம.உ | |
2005 | ஐயர் ஐ. பி. எஸ் | வெங்கடாசலபதியின் மகன் | |
2005 | தொட்டி ஜெயா | ||
2005 | ஆணை | ||
2006 | தாட்டா | கன்னட படம் | |
2006 | பேரரசு | காவல் ஆய்வாளர் சண்முகப்பாண்டி | |
2007 | மணிகண்டா | ||
2007 | நான் அவனில்லை | தியாகு | |
2007 | வேல் | வீரபாண்டி | |
2007 | துரை | துணை ஆணையர் ஈஸ்வர பாண்டியன் | |
2008 | தோட்டா | அமைச்சரின் மகன் | |
2008 | இனி வரும் காலம் | தம்பா | |
2008 | காமண்ணா மக்களு | பெட்டலா | கன்னட படம் |
2008 | குசேலன் | குப்புசாமியின் உதவியாளர் | |
2009 | மூணார் | கதிர்வேல் | |
2009 | பேராண்மை | ||
2010 | தம்பிக்கு இந்த ஊரு | ||
2010 | பெண் சிங்கம் | பரசுராமன் | |
2010 | வாடா | ||
2010 | வல்லக்கோட்டை | காவல் ஆய்வாளர் | |
2010 | மண்டபம் | காவல் ஆய்வாளர் | |
2010 | நெல்லு | ||
2011 | வேங்கை | காவல் துணை ஆணையர் | |
2011 | புலிவேசம் | ||
2011 | வேலாயுதம் | காளிதாஸ் | |
2012 | திருத்தணி | பிரகாஷ் | |
2013 | புத்தகம் | ஆனந்த் | |
2013 | ரகளபுரம் | வீரபாண்டி | |
2014 | தலைவன் | முத்துக்குமார் | |
2014 | பூஜை | துருகாவின் தந்தை | |
2014 | மீகாமன் | பெஞ்சமின் வாஸ் | |
2015 | கில்லாடி | காவல் அதிகாரி | |
2015 | அச்சாரம் | காவல் அதிகாரி | |
2015 | பள்ளிக்கூடம் போகாமலே | பள்ளி ஆசிரியர் | |
2016 | கிடாரி | புலிகுத்தி பாண்டியன் | |
2018 | பிரேம பரஹா / சொல்லிவிடவா | சுபேந்திர கணேசன் | பன்மொழி படம் (கன்னடம், தமிழ்) |
2018 | தமிழ் படம் 2 | வாசிம் கான் | |
2018 | சாமி 2 | மகேந்திர பிச்சை | |
2018 | சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் | ராகவன் | |
2019 | விசுவாசம் | கோழிமுத்து | |
2019 | ராக்கி: தி ரிவஞ்ச் | Paandi | |
அறிவிக்கப்படும் | லாபம் | அறிவிக்கப்படும் | |
TBA | புத்தன் ஏசு காந்தி | அறிவிக்கப்படும் | Delayed |
TBA | வணங்காமுடி (வரவிருக்கும் திரைப்படம்) | அறிவிக்கப்படும் | Delayed |
குறிப்புகள்
- ↑ "NADIGAR SANGAM | O.A.K.SUNDAR". https://www.youtube.com/watch?v=CZnSWXUfIJE.
- ↑ 2.0 2.1 "Sundar back to silverscreen". 26 March 2019. https://www.deccanchronicle.com/151130/entertainment-kollywood/article/sundar-back-silverscreen.
- ↑ "சின்னத்திரைக்கு குட் பை சொல்கிறார் ஓ.ஏ.கே.சுந்தர் | OAK Sundar to quit television" (in ta). 14 December 2015. https://cinema.dinamalar.com/tamil-tv-serials/40801/Chinna-thirai-Television-News/OAK-Sundar-to-quit-television.htm.
- ↑ "Kidaari Movie Review {3/5}: Critic Review of Kidaari by Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/kidaari/movie-review/53990885.cms.
- ↑ Subramanian, Anupama (3 September 2016). "Kidaari movie review: Interesting film with violence, gore and contrivances". https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/030916/kidaari-is-an-interesting-film-with-a-lot-of-violence-gore-and-contrivances.html.
- ↑ "Has Saamy 2 story line leaked?". 28 December 2017. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/has-saamy-2-story-line-leaked/articleshow/62279128.cms.
- ↑ Subramanian, Anupama (14 April 2019). "Rocky - The Revenge movie review: A Canine's Revenge". https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/140419/rocky-the-revenge-movie-review-a-canines-revenge.html.
- ↑ "Utthama Putthiran@60 brings together families". 4 April 2018. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/040418/utthama-putthiran60-brings-together-families.html.
- ↑ Rangarajan, Malathi (5 April 2018). "Sivaji’s ‘Uthama Puthiran’ has a timeless appeal". https://www.thehindu.com/entertainment/art/this-sivaji-starrer-celebrated-60-years/article23443456.ece.
- ↑ "Tamil Cinema | Kombu Full Movie". https://www.youtube.com/watch?list=PLAWx3ia-McTA8NANNVQ2csLnF-J0ZXcD6&v=DAolSOOEyD0.
- ↑ "Caught in the act - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/regional/movie-details/news-interviews/Caught-in-the-act/articleshow/4183298.cms.