ஓ. என். வி. குறுப்பு இலக்கிய விருது

ஓ. என். வி. குறுப்பு இலக்கிய விருது (O. N. V. Literary Award)(1931–2016) என்பது மலையாளக் கவிஞர் ஓ. என். வி. குறுப்பு நினைவாக ஓ. என். வி இலக்கிய விருது 2017ஆம் ஆண்டு முதல் ஓ. என். வி. கலாச்சார குழுமத்தினால் வழங்கப்படுகிறது. இந்த விருது ஒரு தேசிய விருது ஆகும். இதற்காக இந்தியா முழுவதும் உள்ள எழுத்தாளர்கள் இலக்கியத்திற்கான ஒட்டுமொத்த பங்களிப்புகளிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால் இதுவரை, மலையாள மொழி ஆசிரியர்கள் மட்டுமே இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நினைவுப் பரிசாகச் சிலை, மேற்கோள், மற்றும் 300,000 வழங்கப்படுகிறது.

விருது பெற்றவர்கள்

ஆண்டு பெறுநர் படம் நடுவர் மேற்கோள்
2017 சுகதகுமாரி   எம். லீலாவதி
சி. ராதாகிருஷ்ணன்
பிரபா வர்மா
[1]
2018 எம்.டி.வாசுதேவன் நாயர்   எம்.எம்.பஷீர்
கே. ஜெயக்குமார்
பிரபா வர்மா
[2]
2019 அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி   சி. ராதாகிருஷ்ணன்
எஸ். வி.வேணுகோபன் நாயர்
பிரபா வர்மா
[3]
2020 எம். லீலாவதி   சி. ராதாகிருஷ்ணன்
பிரபா வர்மா
அனில் வல்லத்தோல்
[4]

மேற்கோள்கள்