ஓர் இரவு (1951 திரைப்படம்)
ஓர் இரவு 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், பி. எஸ். சரோஜா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படமானது அண்ணாதுரை அவர்கள் எழுதிய நாடக ஒரிரவு என்னும் நாடகத்தை அதே பெயரில் படமாக தயாரிக்கப்பட்டது. நாடகம் வெற்றியடைந்த அளவுக்கு திரைப்படம் வெற்றியடையவில்லை.
ஓர் இரவு | |
---|---|
இயக்கம் | ப. நீலகண்டன் |
தயாரிப்பு | ஏ. வி. மெய்யப்பச் செட்டியார் |
கதை | சி. என். அண்ணாதுரை |
நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் தி. க. சண்முகம் டி. எஸ். பாலையா பி. எஸ். சரோஜா லலிதா |
வெளியீடு | மே 1951 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
துணுக்குகள்
- அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் இத்திரைப்படம் வெளிவந்தது.
- பாரதிதாசனின் வரிகளில் துன்பம் நேர்கையில்.. என்ற பாடல் இப்படத்தில் இடம்பெற்றுப் பிரபலமானது. இப்பாடலை எம். எஸ். ராஜேஸ்வரி, வி. ஜே. வர்மா ஆகியோர் பாடியிருந்தனர்.
- நாகேஸ்வர ராவ், லலிதா, பத்மினி தோன்றும் குறவர்-குறத்தியர் நடனம் இப்படத்தின் சிறப்பாகும்.
- இலங்கையில் இத்திரைப்படம் மே 18, 1951 இல் பல முக்கிய நகரங்களிலும் திரையிடப்பட்டது.
உசாத்துணை
- ஓர் இரவு பரணிடப்பட்டது 2011-06-14 at the வந்தவழி இயந்திரம்
வெளியிணைப்புகள்
வார்ப்புரு:ஏவிஎம்