ஓடியாடல்

ஓடியாடல் சிறுவர்களின் விளையாட்டுகளில் ஒன்று. சங்ககால அரசன் கரிகாலனின் புதல்வர்கள் ஓடியாடியது பற்றிய செய்தி உள்ளது. கரிகாலன் காவிரிப்பூம்பட்டினத்தைத் தன் இரண்டாவது தலைநகரமாக மாற்றிக்கொண்டான். அங்குக் கோட்டைக் கொத்தளங்களை அமைத்தான். [1]

அந்தக் கோட்டைவாயில் பகுதியில் கரிகாலனின் புதல்வர்கள் ஓடியாடினர். [2] அவர்கள் தம் கால்களில் கழல்களும், தொடி என்னும் காப்புகளும் அணிந்திருந்தனர். அந்த அணிகலன்கள் பிற வேந்தர் சூடிய பொன்னால் செய்யப்பட்டவையாம்.

ஓடியாடல் விளையாட்டு என்பது அதனைத் தொடல், இதனைத் தொடல், அதில் நிற்றல், இதில் நிற்றல் என வைத்துக்கொண்டு ஓடியாடும் விளையாட்டாகும்.

இவற்றையும் பார்க்க

அடிக்குறிப்பு

  1.  
    பிறங்குநிலை மாடத்து உறந்தை போக்கி
    கோயிலொடு குடிநிறீஇ
    வாயிலொடு புழை அமைத்து
    ஞாயில்தொறும் புதை நிறீஇ - பட்டினப்பாலை 285 முதல்

  2.  
    விசிப்பிணி முரசின் வேந்தர் சூடிய
    பசுமணி பொருத பரேர் எறுழ் கழற்கால்
    பொற்றொடிப் புதல்வர் ஓடியாடவும் - பட்டினப்பாலை 293-295

"https://tamilar.wiki/index.php?title=ஓடியாடல்&oldid=13155" இருந்து மீள்விக்கப்பட்டது