ஒலிவியா (OliviaT) ஓர் நடனக் கலைஞரும், இசைக் கலைஞரும் பாடகரும் ஆவார். இளவயதில் இலங்கையில் இருந்து ஜெர்மனிக்கு சென்றாலும் தன் பண்பாட்டை மறவாது கடைபிடித்தனர் ஒலிவியா குடும்பத்தினர். வீட்டில் தமிழ் பேசியும், தமிழ்ப் பண்பாட்டைப் பேணியும் வளர்ந்தார். ஐந்து வயதில் பரதநாட்டியம் கற்றார். பின்னர் இலண்டன் சென்று நடன ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பெற்றார். லண்டனின் கீழ்த்திசை கலை அகாதெமியில் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தி, நாட்டிய கலாஜோதி என்னும் பட்டம் பெற்றார். ஜெர்மனி கலை பண்பாட்டுக் கழகத்தால் ஆடற்கலை அரசி என்னும் சிறப்புப் பட்டம் பெற்றார். ஜெர்மனியின் கானம்பாடி என்னும் நிகழ்ச்சியில் பாடி ஜெர்மன் இன்னிசைக் குரல் என்னும் பட்டம் பெற்றார். இவர் நடனத்துடன் பாடல்களையும் வெளியிட்டுள்ளார். சிங்கப்பூர், மலேசியத் தமிழ் ஊடகங்கள் இவரைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளன.
Ananthi Magazine.
OliviaT |
---|
|
பின்னணித் தகவல்கள் |
---|
இயற்பெயர் | ஒலிவியா |
---|
இயற்பெயர் | ஒலிவியா தனபாலசிங்கம் |
---|
பிறப்பு | 21 சூலை 1986 (1986-07-21) (அகவை 38) ஜெர்மனி |
---|
பிறப்பிடம் | இலங்கை |
---|
இசை வடிவங்கள் | உலக இசை, கருநாடக இசை |
---|
இசைக்கருவி(கள்) | பாடகர், இசைக் கலைஞர் |
---|
இணையதளம் | baratham.com |
---|
விருதுகள்
- கானம்பாடி: கலை பண்பாட்டுக் கழகம், ஜெர்மனி 1997, 1998
- சங்கீத கலாஜோதி - வீணை: கீழ்த்திசை கலை அகாதெமி, லண்டன் 2004
- சங்கீத கலாஜோதி - சங்கீதம்: கீழ்த்திசை கலை அகாதெமி, லண்டன் 2004
- நாட்டிய கலாஜோதி: கீழ்த்திசை கலை அகாதெமி, லண்டன் 2005
- ஜேர்மனிய இன்னிசைக்குரல்: பன்னாட்டு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தமிழ், இலண்டன் 2006
- ஆடற்கலை அரசி: கலை பண்பாட்டுக் கழகம், ஜெர்மனி 2006
- கலாஞான வாரதி: கீழ்த்திசை கலை அகாதெமி, ஜெர்மனி 2010
- இந்த மாதத்தின் கலைஞர்: ஏ9 ரேடியோ, கனடா, 2010
இசைக் கோவைகள்
பெயர் |
இசை |
தொடுப்பு |
ஆண்டு
|
---|
புலத்தில் ஈழ தாகம் |
எஸ். கே. பஞ்சு |
ராம்லி ரெக்கார்ட்ஸ் |
2001
| மந்த்ரா |
ஒல்லின் டி |
தமிழ் மீடியன் |
2004
| நவ ஒளி |
பிரின்சுடன் ஜி |
ஐங்கரன் இண்டர்நேசனல் |
2007
| ஆஞ்சனேயனே வாயுதேவனே |
சிறீ பாசுக்கரன் |
ஆஞ்சநேயர் கோயில் |
2007
| துன்பத்தை நீக்கிடும் |
பிரின்சுடன் ஜி |
ராம்லி ரெக்கார்ட்ஸ் |
2008
| எழுந்து வா தமிழா |
பிரின்சுடன் ஜி |
க்ரொடன் தமிழ்க் குழு |
2009
|
தனிப் பாடல்கள்
பெயர் |
இசை |
தொடுப்பு |
ஆண்டு
|
---|
காதல் கடிதம் |
ஜீவா |
வெற்றிமணி |
2003
| மூன்று எழுத்து |
பிரின்சுடன் ஜி |
டி ஒய் சி |
2006
| அம்மா |
பிரின்சுடன் ஜி |
தீபம் தொலைக்காட்சி |
2006
| காதலின் இனிமை |
பிரின்சுடன் ஜி |
டி ஒய் சி |
2008
| நீ வருவாயோ |
பிரின்சுடன் ஜி |
டி ஒய் சி |
2008
| ஓவர்புளோ : லவ் |
ட்ரேஸ்டன் |
டி ஒய் சி |
2010
| என்னோடு நீ |
ட்ரேஸ்டன் |
எத்னோடோன் |
2011
|
மேற்கோள்கள்
|
|