ஒரூஉத்தனார்

ஒரூஉத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர் . இவரது பாடலாகக் கிடைத்துள்ளது ஒரே ஒரு பாடல். அது புறநானூற்றில் 275 -ஆம் பாடலாக உள்ளது. அந்தப் பாடல் எருமை மறம் என்னும் துறையைச் சார்ந்தது. பெரும்படையின் நடுவே நனியொருவனாக எதிர்த்து நின்று போரிடுவது எருமை மறம். ஒருவித தனியொருவன் போரிடுவதைப் பாடியதால் இவர் ஒரூஉத்தனான் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளார். ஒரூஉ = ஒருவி நில். தனித்து நில்.

பாடல் தரும் செய்தி

எருமை போன்று அசையாத் தன்மையோடு தனியொருவனாக எதிர்த்து நின்று அவன் போரிடுகிறான். கன்றுக்காகக் காட்டில் தாய்ப்பசு முன்னின்று போராடுவது போலத் தன் தோழனுக்காகப் போரிடுகிறான். அவன் தலையுச்சியில் தும்பை மாலை. இடையிலே கொடுந்திரையாகக்(கச்சமாக) கட்டிய ஆடை. வேந்தன் விரும்பியதைத் தானும் சொல்லி ஒத்துச் செயல்படுதல் இவன் வழக்கம். சினங்கொண்டு தாக்கும் கூவை என்னும் படை அணிவகுப்பைத் தன் வேலால் பிளந்துகொண்டு முன்னேறுகிறான். பகைவர்கள் இவனிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள், பாதுகாத்துக்கொள்ளுங்கள், இவன் யாரையும் பாதுகாக்கமாட்டான். யானை தன்னைப் பிணித்திருந்த சங்கிலியை இழுத்துக்கொண்டு செல்வது போல இவன் சன் சரிந்த குடலைக் கையில் பிடித்துக்கொண்டு போரிடுகிறான்' என்று கதறினர்.

"https://tamilar.wiki/index.php?title=ஒரூஉத்தனார்&oldid=11872" இருந்து மீள்விக்கப்பட்டது