ஒரு நடுப்பகல் மரணம் (புதினம்)
ஒரு நடுப்பகல் மரணம், சுஜாதாவால் குங்குமம் இதழில் எழுதப்பட்டுத் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் கிழக்குப் பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
நூலாசிரியர் | சுஜாதா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | கிழக்குப் பதிப்பகம் [1] விசா பப்ளிகேஷன்ஸ்[2] |
வெளியிடப்பட்ட நாள் | மே2011 |
பக்கங்கள் | 296 |
ISBN | 978-81-8493-557-8 |
கதைக் கரு
திருமணமாகி இரண்டே நாளில் தேனிலவு சென்ற இடத்தில் கொலை செய்யப்படுகிறார் புது மாப்பிள்ளை. அவரைக் கொன்றது யார், அதன் காரணம் என்ன? கண்டறியாமல் விடுவதில்லை என்று தீர்மானம் செய்கிறாள் கொல்லப்பட்டவரின் மனைவி. போலீஸ் அதிகாரிகளும் கொலையாளியைக் கண்டறிய முயற்சி செய்கிறார்கள். கொலை செய்தவன் யார் என்பது வெளிப்பட்டதா என்று செல்லும் கதை.
கதை மாந்தர்கள்
- மாதவராவ்
- கோபிநாத்
- கிருஷ்ணமூர்த்தி
- உமா
- மணி
- திவ்யா
- ஆனந்த்
- ராகேஷ்
- இந்தர்ஜித்
- ராமகிருஷ்ணன் மற்றும் பலர்.